பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 647 - தொகுப்பில் ஏற்கெனவே கொடுக்கப் பட்டுள்ளன. மன்னரது தெற்குப்பகுதி பிரதிநிதியாக தனுக் கோடி இராமுத்தேவர் பணியேற்றிருக்கவேண்டுமென்பது ஊகம். இந்தச் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சித் துரெட்டி யார் மடம் அருப்புக் கோட்டை வட்டத்தில் பரளாட்சி என்ற ஊருக்கு வடக்கே ஆறுகல் தொலைவில் உள்ளது. இந்த மடம் உள்ள பகுதி தற்பொழுது வடக்கு நத்தம் என்று வழங்கப்படு கிறது. செப்பேட்டில் இதன் பெயர் நத்தக்காடு ஆகும். பதினைந்து பதினாறாவது நூற்றாண்டுகளில் ஆந்திர மாநிலத் திலிருந்து இங்கு குடியேறிய வருக மக்களில் சிறப்பான சித்து ரெட்டியார் என்பவர் இதனை நிறுவியிருக்க வேண்டும். இந்த மடத்தின் கல்துரண் ஒன்றில் சித்துரெட்டியாரும் அவரது மனைவியும் அதன் எதிரேயுள்ள மற்றொரு துரணில் அவரது மகனும் மனைவியர் இருவர் திருவுருவங்களும் வடிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன. இந்த மடத்தை மக்கள் ஆறுமுகசாமி மடம் என்று வழங்கி வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்னர் இந்த மடத்திற்கு எதிர் பகுதியில் ஜீவசமாதி கொண்ட ஆறுமுகம்சாமி என்ற சித்தரது சமாதியும் முருகனுக்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறிய திருக்கோயிலும் மக்களிடம் பிரபலமாகியிருப்பதே இதற்குக் காரணமாகும். அந்த சித்தர் சமாதி அடைந்த சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் அவருக்கு குருபூஜை விழா சிறப்பாக நடந்தேறி வருகிறது. இந்த மட கைங் காரியத்திற்க்காக தானம் வழங்கப்பட் டுள்ள வேப்பங்குளம் இந்த ஊரை அடுத்த பரளாச்சி சாலையில் செட்டிகுளம் விலக்கு வழிக்கு, கிழக்கேயுள்ளது. இதன் நான்கு எல்லையாகக் குறிப்பிடப்பட்டுள்ளவையிலிருந்து மூன்று புதிய தகவல்கள், கிடைக்கின்றன. பரளாட்சி என்று வழங்கப்படும் ஊரின் முந்தைய சிறப்புப் பெயர் பல்லவர் குலாந்தக நல்லூர் என்பது. மதுராந்தகன், சோழ குலாந்தகன் பாண்டிய குலாந் தகன் ஆகிய வரலாற்றுப் பெயர்கள் மக்களது உயிரைப் பறிப்ப தில் பேதமில்லாது கடமையாற்றும் கண்களில்லாத அந்த கன் போல செயல்படும் எமன் என்ற பொருளில், முறையே மதுரை க்கு, சோழனுக்கு, பாண்டியனுக்கு எமன் என்ற பொருளில் இந்த