பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 695 - - ஒலைப்பட்டயங்களைப் பயன்படுத்தினர். இவைகளில் மிகவும் தொன்மையான ஒலைப்பட்டயம் ஒன்று கி.பி. 1326ல் மங்கை பாக குருக்களுக்கு வழங்கப்பட்டதை இராமநாதபுரம் மேன்யுவல் தெரிவிக்கின்றது:. இத்தகைய ஆவணமென்று அனுமந்தக்குடி கோயிலில் நல்லநிலையில் இருந்து வருகின்றது. இன்றைய பசும்பொன் மாவட்டத்தில் தேவகோட்டை வட்டம் தேவகோட்டை நகருக்குக் கிழக்கே எட்டுக்கல் தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது. சேதுபதி சீமையில் உள்ள இராமாயண இதிகாசம் சம்மந்தப் பட்ட பல ஊர்களில் இதுவும் ஒன்று. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த வட்டாரத்தில் கணிசமான எண்ணிக்கையில் சம னர்கள் வாழ்ந்து வந்த செய்தினை இந்தப் பட்டயம் தெரிவிக் கின்றது. அண்மைக்காலம் வரை இந்த ஊருக்குக் கிழக்கே பனஞ்சாயலிலும் மேற்கே சாத்தப்பள்ளியிலும் அமண் பள்ளிகள் இயங்கி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வட்டாரத்தில் நாகர்குளம் , நாகாடி நாகாணி, பள்ளி, தர்மம் , சங்க וונfr. יש மங்களம், சாத்தரசன் கோட்டை, சாத்தனூர், குணபதி மங்கலம் என்ற ஊர்களின் பெயர்கள் சமணர்களது குடியிருப்புகளை நினை வட்டுபவை. மழித்த தலை பினரான இந்த மக்கள் மொட்டைப் பிள்ளைமார் என்ற பிரிவினராக இருந்து நாளடைவில் பரந்த இந்து சமுதாயத்தில் கலந்து விட்டனர். ஆனால் அனுமந்த க் குடியில் மாளுவநாதசுவாமி ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து வருகின்ற சில சமணர் குடும்பங்கள் இன்றும் இருந்து வரு கின்றனர். ஜீனேந்திரமங்கலம் என்றும் குரவடிமிதி என்றும் இந்த ஊர் முன்னர் வழங்கப்பட்டதை அங்குள்ள கல் வெட்டு (கி.பி 1553) தெரிவிக்கின்றது. இந்தக் கோவிலுக்கு ஏற்கனவே சர்வமானியமாக வழங்கியிருந்த அனுமந்தக்குடி கிராமத்தை ஏதோ ஒரு காரணத்தினால் அரண்மனை திறப் பில் சேர்த்துக் கொண்டு அதற்குப் பதிலாக வடக்குச் செய்யா னேந்தல் என்ற ஊரினை சேதுபதி மன்னர் இந்தத் திருக் † Raja a n R o T- Manual of Ramnad Samas thanam (1891) P. 206 † A. R. E. 408/907