பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/701

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 9 - - - - - - - சேதுபதிகளது ஆட்சி : இந்த நூற்றாண்டில் இந்த மன்னர்களது ஆட்சியின் பரப்பு தஞ்சை வளநாட்டின் திருவாரூர் வரை விரிந்து பரவி இருந்ததை இராமநாதபுரம் மானுவலில் இருந்து தெரியவரு கிறது. புதுக்கோட்டைக் கல்வெட்டுகளும் சமஸ்தான வரலாறும் திருவாரூர் கோயில் செப்பேடும் இந்த ஆட்சிப்பரப்பிற்கான அத்தாட்சியை உறுதிசெய்வதுடன், சேதுபதி சீமையின் வடக்கு காவல் அரணாக திருமெய்யம் கோட்டை விளங்கியிருப்பதையும் உறுதிசெய்கின்றன. இந்த சேதுபதி மன்னர்கள் மறவர் இனத் தின் பிரதானமான எட்டுக் கிளைகளில் ஒன்றான செம்பிநாட் டுக் கிளையைச் சேர்ந்தவர்கள். செம்பிநாடு என்பது சோழ நாட்டை குறிப்பது ஆகும். தங்களது பூர்வீக நாட்டையும் நாட்டு மன்னர்களையும் நினைவுபடுத்தும் வகையில் அவர்கள் புதிதாகக் குடியேறி நிலைத்து வாழ்ந்த பாண்டி நாட்டுப்பகுதிக்கு 'செம்பிநாடு' எனப்பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பன்னிரண் டாம் நூற்றாண்டிற்கு முந்தைய பாண்டி மண்டலத்தில் செம்பி நாடு என்ற நிலக்கூறு இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனைப்போன்றே தங்களது குடியிருப்புக்களுக்கும், அவர்களுடைய பூர்வீக சோழநாட்டு ஊர்ப்பெயர்களையே சூட்டி னர். அந்தப்பெயர்களிலேயே அந்த ஊர்கள் இன்றளவும் வழங் கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள அகளங்கன் கோட்டை, குலோத்துங்க சோழநல்லூர், விரையாத கண்டன், கங்கை கொண்டான், கிடாரம் கொண்டான், கி(ள்)ளியூர், செம்பியன்குடி, சோழபுரம், சோழப் பெரியான், சோழந்துளர், சோழியக்குடி, சோழசேரி, சோழகுளம், சோழந்தி, ஆகியவை அந்த ஊர்கள். ஆனால், இந்தக் காலக் கட்டங்களில் தனி ஆதிக்கம் செலுத்தத்தக்க அரசு எதுவும். இந்தப் பகுதியில் இருந்ததாக வரலாற்றுச் செய்திகள் இல்லை. மாறாக கி.பி. 912ல் பராந்த கச் சோழன், பேரரசன் ராஜசிம்மபாண்டியனை தோற்கடித்து மதுரையில் வீராபிசேகம் செய்து கொண்டான். மதுரை 23. Statement of Accounts - Pudukottai Records (1810)