பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv இந்நூலில் சேதுபதி மன்னர்கள் கொடுத்த தானங்களைக் தாங்கி நிற்கும் தொண்ணுாறு செப்பேடுகளைத் திரட்டி அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளையும் சமயச் செய்திகளையும், சமுதாயச் செய்திகளையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். தொடக்கத்தில் சேதுபதி மன்னர்களின் தோற்றம் பற்றிய செய்திகளை ஆய்கிறார். பதி: என்ற சொல், ஊரையும், தலைவன் அல்லது அரசன் என்பதையும் குறிக்கும். சேதுபதி என்பது இராமேசுவரத்தைக் குறிக்கும். இராமேசுவரத்தையும் அங்கு சென்று வரும் பாதையையும் காத்து நின்றதால் இம் மன்னர்களுக்கு சேதுபதி காத்த தேவர் என்ற பெயர் இருந்தது. இதைத்தான் இம்மன்னர்கள் தமது செப்பேடுகள் அனைத்திலும் குறித்துள்ளனர். சேது" என்றும் இ ராமேசுவரத்தை வடமொழியில் குறிப்பர். சேதுபதி என்பது இராமேசுவரத்தின் அரசர் என்ற பொருளிலும் வந்ததால் இவர்களை சேதுபதி என சுருக்கமாக அழைக்கிறோம். இவர்களது குலதெய்வம் இராமநாத சுவாமி யாகும். அதைக் கமால் அவர்கள் குறிக்கும் போது அந்த தெய்வத்தின் தொண்டர் அடிப்பொடியாக வாழ்ந்தனர். என்று குறித்துள்ளது ஒரு பெரும் சமய தத்துவத்தையே வெளிக்காட்டு கிறது. சேதுபதி மன்னர்கள் மறவர். இனத்தின் எட்டுக்கிளைகளில் ஒன்றான செம்பி நாட்டுக் கிளையைச் சார்ந்தவர்கள் என்பதைக் குறிக்கிறார். சூரன் கோட்டை கற்கோட்டையாக மாறி இராம நாதபுரமாக மாறியதை, வருவாய்த்துறை பதிவேடுகளிலிருந் தும் விளக்குகிறார். o இச்சேதுபதி மன்னர்கள் தங்களது வாழ்வில் - பிறப்பு, இறப்பு, முடிசூட்டல் ஆகிய சடங்குகளில் பிரம்மண்ய நடை முறைகளைப் பின்பற்றியவர்கள் என்பதையும், இந்துசமய சைவசித்தாந்த நெறியினை உறுதியாகப் பின்பற்றியவர்கள் என்பதையும், அதே சமயம் மற்ற சமயத்தினரிடம் கொண்ட அன் பையும் ஈடுபாட்டையும் தெளிவாகக் காட்டுகிறார். யார் ஒருவர் தமது சமயத்தத்துவங்களை உண்மையாக உணர்கிறார் களோ, அவரே பிற சமயங்கள் அனைத்தையும் பாராட்டி போற்றி நிற்பர். அறியாதாரே ஒருவரோடொருவருக்குள் பகைமையை வளர்ப்பர். சேதுபதி மன்னர் சிறந்த சமயப்பற் றுள்ளவர்களாகத் திகழ்ந்ததால் தான், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய அனைத்து சமயங்களையும் போற்றியு ஸ்ளனர்.