பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 363 --- --- - - _ இராமேசுவரத்து அரண்மனை (வரி-68) என்பது திருமலை ரெகுநாத சேதுபதியின் காலத்தில் அவரது சொந்த உபயோகத் திற்காக இராமேசுவரம் மேலரத வீதியில் அமைக்கப்பட்ட தாகும். விளத்துார் மண்கோட்டை (வரி-37) குறிக்கப்படுவதில் இருந்து தொண்டி சாலையில்-விளத்துரில் ஒரு காவல் அரண் இருந்து வந்ததும் இந்தச் செப்பேட்டின் வழி தெரிய வருகிறது. திருக்கோயிலுக்காக தானமாக விடப்பட்ட நிலங்களைத் தவிர பலபட்டடை வருவாய்கள் எங்கெல்லாம் கோயிலுக்கு கிடைத்தது என்பதை விவரிக்கும் ஒரு அரிய செப்பேடு இது.