பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 387 வெற்றியை குறிக்கும் வண்ணம் இந்தத் திருக்கோயிலில் வீரா பிசேகம் செய்து கொண்டு திருபுவன வீரதேவன்' என்ற தனது விருதுடன் கூடிய கல்வெட்டையும் இங்கு பொறிக்கச் செய்தான். இவ்விதம் சோழ மன்னர்களால் சிறப்பான திருப் பணிகள் செய்யப்பட்டு வரலாற்றில் வாழ்கின்றது. இந்த ஊர். இங்கு எழுந்தருளியுள்ள தியாகேசருக்கு தமது திருவாரூர் சீமை யில் உள்ள அன்னவாசல் என்ற ஊரினை தானம் செய்ததை இந்தப்பட்டயம் தெரிவிக்கின்றது. இந்தக் கிராமக்திற்கான நான்கு எல்கைகளும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் மணியம் போன்ற வருவாய்களைத் தவிர ஏனையப் பகுதிகளின் வருவாய் அனைத்தும் இந்தத் திருக்கோயிலுக்கு சேரவேண்டு மென்பதாக இந்தப் பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னர் தீவிரமான சிவபக்தர் என்ற முறையில் அவரது முன் னோர் யாரும் செய்யாத தர்மத்தை இவர் நிறைவேற்றியிருப் பது அங்கு புற்றிடம் கொண்ட பெருமானிடமும் இறைவி திருக் காம வல்லி மீதும் கொண்ட சிறப்பான ஈடுபாட்டைக் குறிப்ப தாக உள்ளது. - * இந்தப்பட்டயம் இன்னும் சில சிறப்பான தகவல்களைத் தருகின்றது. ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தில் சேது நாட்டின் எல்லைகள் விரிவுபெற்று சோழ மண் டலத்து திருவாரூர்வரை பரந்திருந்ததாக இராமநாதபுரம் மேன் யுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வேறு ஆவணங்கள் இல்லாத நிலையில் இந்தப் பட்டயச் செய்தி திரு வாரூர் சீமையில் நம்பிபாடி மாகாணத்தில் பாண்டாய் ஆற்றுப் போக்கில் உள்ள அன்னவாசல் கிராமத்தை தானம் செய்ததாக வரைந்திருப்பது இந்த உண்மையை உறுதி செய்கிறது. பதி னெட்டாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் சோழமண்டல முத்து திருவாரூர் சீமை நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என்ப தற்கு இந்தப்பட்டயம் ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது. கி.பி. 1730-ல் மறவர் சீன்மயில் ஏற்பட்ட வாரிசு வழிச் சண்டையில் தலையிட்டு பவானி சங்கரத் தேவரை அகற்றி கட்டத்தேவருக்கும், சசிவர்ணத்தேவருக்கும் படையுதவி வழங்கிய தஞ்சை மராட்டிய மன்னர் தமது ஒப்பந்தப்படி வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள சேதுபதி சீமையை கைப்பற்றிக் கொண்டதால் அன்றிலிருந்து திருவாரூர் சீமை தஞ்சை மராத்தியரது உடைமை யாகியது. L i - ா - --- 1 Rajaram Rao - T Manual of Ramnad Samasthanam (1891)