பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 49 இருந்து தெரிய வருகிறது.' பள்ளிச்சந்தம், பள்ளிவாசல் மானிய ஊர், நிலம் எல்லையைக் குறிப்பிட் நாட்டப்பட்ட கற்களுக்கு பெயர் ஏதும் இருந்ததா என்பது தெரியவில்லை. -- நீர் ஆதாரங்கள் : இந்தச் செப்பேடுகளில் நீர்தேக்கங்கள் குறிக்க கண்மாய், ஏந்தல், ஊரணி, குளம், குட்டை, குண்டு என்ற சொற்கள் பயிலப்பட்டு வந்துள்ளன. சில செப்பேடுகளில் கண்மாய் என்ற சொல் கண் வாய் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கு ஆதாரமாக வைகை ஆற்றுப்பாய்ச்சல், பாண்டயாய் ஆற்றுப் பாய்ச்சல், தேனாற்றுப் பாய்ச்சல், விரிசிலை ஆற்றுப்பாய்ச்சல், குண்டாற்று பாய்ச்சல், ரெகுநாத காவேரி என்ற நீர் ஆதாரங்கள் ஆங்காங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகளி லிருந்து ஆற்று நீரினைக் கொண்டு வருவதற்கு நீண்ட குறுகிய கால்கள் வெட்டப்பட்டு இருந்தன. இவை, நீர்வாங்கி, வரத்துக்கால் எனவும், வாய்க்கால் எனவும் வழங்கப்பட்டன. சில பகுதிகளில் இந்தச்சொற்கள் வகுத்துக்கால்’’ бтбот வழக்கில் இருந்தன. இவைகளின் மூலம் வரப்பெற்ற வெள்ள நீரை மிகுதியாகப் பெற்ற பொழுது அதனை வெளியேற்றுவதற்கு பிறிதொரு காலும் பயன் படுத்தப்பட்டது. அதற்கு மறுகால் எனப்பெயர், கண்மாய்களில் இருந்து நேரடியாக நீரை வெளி யேற்ற பெரிய கண்களை உடைய வழி கலுங்கு என்றும் சிறிய வழி மடை என்றும் வழக்குப் பெற்றிருந்தன. சிறிய ஏந்தல் கண்மாய்களின் நீர் கொள்ளளவு குறைவாக இருப்பதால், கூடு தலாக வரும் நீரினை வெளியேற்றுவதற்கு அந்தக் கண்மாய்க் கரையின் ஒரு இடத்தில், கரை இல்லாமல் இடைவெளி விட்டு கரை அமைக்கப்பட்டு இருக்கும். இதன் வழி வெள்ளம் தானாக' வழிந்து வெளியேறும். அந்தப்பகுதி தான் போகி ' எனப் பட்டது. ஆற்று நீரைத்தவிர மழை நீரைக் கொண்டு வருகிற கால், ஓடை, எனப்பட்டது. ஒரு கண்மாயின் நீண்ட கரை அடுத்த கண்மாயுடன் தொடர்ந்து இணைப்பாக அமைக்கப்பட்டு இருந்தால் அந்த இணைப்புப்பகுதி பொருத்து ஆகும். அந்தக் கண்மாயின்மூலை, 14. மாவட்ட செய்தி மடல் - கிராம மாவட்ட ஆவணக்குழு நவம்பர். 89