பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 எஸ். எம். கமால் தொடக்கம். அல்லது இறுதிப்பகுதி "கொம்பு. கடைக்கொம்பு' என்று குறிப்பிடப்பட்டன. இந்த கண்மாய் கரையையடுத்துள்ள கண்மாய்பகுதி உள்வாய்' என்றும் இந்தப்பகுதியில், நீர்ப்பிடி யையொட்டி இருந்த விளைநிலம் 'குளம் கோர்வை என்றும் வழங்கப்பட்டன. இந்த கரைகள் மிகுதியான வெள்ளத்தினால் அழிந்து போனால் அவை உடைப்பு: ஆகும். கண்மாய் களில் நீர் நிரம்பிய பிறகும், கிராமப்புறங்களில் நீர்ப்பிடி அல் லாத பகுதிகளிலும் அதாவது கண்மாயின் வெளிப்பகுதி தண்ணிர் தேங்கி நிற்கும் பகுதி காலாங்கரை” எனப்பட்டது. காலை ஒட்டிய கரை. நாளடைவில் இந்தப் பகுதியின் நீர் வற்றி சகதியுமாக மாறிய ஈரப்பகுதி வதி" இடம்பெற்றுள்ளன. இவை போன்ற நிலம், நீர் சம்பந்தமான ஏராளமான கலைச்சொற்கள், பல நூற்றாண்டு காலமாக இந்தச் சீமையில் வழக்கில் இருந்து வருகின்றன. அவைகளில் நமக்குக் கிடைத் துள்ள செப்பேடுகளில் கையாளப்பட்டுள்ளவை மட்டும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை. இந்தச் செப்பேடுகளில் காணப்படும் நீர்த்தேக்கங்களின் பெயர்கள் தொகுப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆறுகள் 1. வையை ஆறு 4. பாம்பாறு 2. விரிசிலை ஆறு 5. தேனாறு 3. மலட்டாறு 6. குண்டாறு ஏரிகள் 1. இராமானுஜப்பேரேரி 4. மாதவனேரி 2. இளமனேரி 5. மாணிக்கனேரி 3. கிழவனேரி 6. வேளானேரி கண்மாய்கள் 1. ஆத்தானுர் கண்மாய் 7. ஏரணிக்கோட்டை கண்மாய் 2. அன்னுரிை கண்மாய் 8. இரைவிமங்கலம் கண்மாய் 3. ஆடிக்கண்மாய் 9. கடுக்கனுார் கண்மாய் 4. ஆய்க்குடி கண்மாய் 10. கருக்காத்தி கண்மாய் 5. ஆண்டுகுடி கண்மாய் 11. கருங்குடி கண்மாய் 6. இராமநாதபுரம் பெரிய 12. கண்ணன்குடி கண்மாய் கண்மாய் 13. கானாட்டான்குடி கண்மாய்