பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/770

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 53 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : சிவகுமாரமுத்து விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் o கலாநிதி கோணய்யன் புத்திரன் ராமய யன 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1658 நல ஆண்டு தை அமாவாசை புண்ணிய நாள் (கி.பி.19-1-1737) 4. செப்பேட்டின் பொருள் : இராமனய்யனுக்கு முதலூர் கிராமம் தானம் இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னரது விருதா வளியாக ஐம்பத்திரண்டு சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள் ளன. அவைகளில் ஆக்கினைக்கு சுக்கிரீவன், பிரசங்கத்திற்கு ஆதிசேஷன், சர்வ சீவ தயாபரன், கருணாகரன் முடி இடன் கவன் துரகநகுலன் இயல் இசைநாடக முத்தமிழ் அறிவாளன், அனபாய அதிவீரன், அதிஜெயன், அரும்பொருள் கடாட்சன் விர தரச மன்று லான், அன்னதான சீலன் ஜெகராஜபணிபாலன் என்ற பன்னிரெண்டு பெயர்கள் மட்டும் புதுமையாக இந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன. கலாநிதி கோணய்யன் மகன் ராமனய்யன் என்பவருக்கு கோவிந்தராஜ சமுத்திரம் என்ற முதலூர் கிராமம் இந்தச் செப் பேட்டின் படி சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ளது. தானம் பெற்றவரின் பெயரில் ரிக் சகாந்தியக்ர்' கலாநிதி என்ற சிறப்புத் தொடர்கள் குறிக்கப்பட்டதில் இருந்து இவர் ஒரு வடமொழி வித்தகர் என்பது தெரிகிறது. இந்த ஊர் இன்றைய இராமநாத