பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 55 நிர்வாக அமைப்பு மறவர் சீமை அரசு சிறப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர் மன்னர், முத்து விசைய ரகுநாத சேதுபதி (கி.பி. 1710 - 28) தமது அரசுப் பகுதியை நிர்வாக வசதிக்காக எட்டு மாகாணங்களாவும் எழுபத் திரண்டு பானையங்களாகரும் பிரித்திருந்தார். எழுதப்படிக்கத் தெரிந்த வேளாளார் பெருமக்களை மதுரைச் சீமையில் இருந்து வரவழைத்து, அவர்களை கிராமக் கணக்கர்களாக நியமனம் செய்தார். மன்னருக்கு அடுத்த நிலையில் ஆணை செலுத்தியவர் பிரதானி, தளகர்த்தர் ஆகியோர். இவர்களுக்கு உதவியாக ராயசம் என்ற செயலரும் அவருக்கு உதவியாக அட்டவணையும் இருந்தனர். இவரை அடுத்து மன்னரான முத்துராமலிங்க விசைய ரகுநாத சேதுபதி, நிர்வாகத்தில் மேலும் பல மாற்றங் களைச் செய்தார். இவரது ஆட்சியில் சேதுநாடு பதினேழு கோட்டங்களாகவும் தொன்னூற்று ஆறு வட்டங்களாகவும் பிரிவினை செய்யப்பட்டன. ஒவ்வொரு வட்டமும் முறையே மணியக்காரர் சம்பிரிதி, தண்டல்காரர் என்ற மூவர் பொறுப்பில் இருந்தது. கோட்ட அளவில் அமீன் அல்லது அமில்தார் என்பவர்' மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அமீன், அமில் தார் - இவை இரண்டும் பார்சி மொழிச் சொற்கள். கி.பி. 1772 முதல் கி.பி. 1781 வரை இராமநாதபுரம் சீமையில் கர்நாடாக நவாப்பின் ஆட்சி நடை பெற்ற பொழுது இந்த பணிப்பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. கி.பி. 1801 முதல் இங்கு ஆங்கிலேயரது ஆட்சி ஏற்பட்டது வரை இந்தப்பணிப்பதவிகள் நீடித்தன. அத்துடன் தண்டல் செய்யப்பட்ட வரித்தொகையைப் பெற்று காத்து வந்த காசாளர் பொக்கிஷம் எனப்பட்டார். கிராம அளவில் இவர்களின் உதவியாளராக நோட்டக்காரர், காவல்காரர், தோட்டி, நீர்க்கண்டி குடும்பன், அளவன், வரியன், பொலிதள்ளி எல்லை விருத்தி குடைவிருத்தி என்ற பணியாளர்கள் இருந்து வந்தனர். இவர்கள் அனைவரும் பரம்பரைப் பணியாளர்களாகவும் சுவந்திரம் மானியம் ஆகிய வருவாய்களில் அடிப்படையில் பணியாற்றி வந்தனர். இப்பொழுது கிடைத்துள்ள செப்பேடுகளில் பிரதானி தளகர்த்தர், மணியக்காரன், ராயசம், அட்டவணை பொக்கிஷம் பற்றிய குறிப்புகள் மட்டும் காணப்படுகின்றன. மறவர் இந்தச் சீமையின் குடிமகனாக பதினேழு, பதினெட்டாவது நூற்றாண்டுகளில் இருந்தவர்கள் பெரும்பாலும் மறவர்கள், நல்ல