பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/795

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 57 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் முத்துக்குமார விஜயரெகுநாத -- சேதுபதி காத்ததேவர் 2. செப்பேடு பெற்றவர் இராமேசுவரம் و نه کيپي காயில் பள்ளிவாசல் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1667 குரோதன ஆண்டு வைகாசி மீ” 11ந் தேதி (கி.பி. 9-5-1745) 4. செப்பேட்டின் பொருள் : மேலேகண்ட பள்ளிவாசல் தருமத் திற்காக புதுக்குளம் கிராமம் தானம் இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னரது அறு பத்தியாறு சிறப்புப் பெயர்கள் விருதாவளியாக இந்தச் செப்பேட் டில் குறிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் முந்தைய செப்பேடு களில் காணப்பட்டவை. இராமேசுவரம் ஆபில் காபில் பள்ளிவாசல் இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரம் வட்டம் இராமேசுவரம் நகரில் இரயில் நிலையத்துக்கு நேர் தெற்கேயுள்ள புனித இடமாகும். செப் பேட்டில் கண்டபடி இது ஒரு பள்ளிவாசல் அல்ல. தர்கா ஆகும். பள்ளிவாசல் முஸ்லீம் மக்களது வழிபாட்டுத் தலமாகும். என்றா லும் முஸ்லீம் பெரியவர்களது புனித இடங்களை (தர்கா) பள்ளிவாசல் என்று குறிப்பிடுவது இந்த வட்டார வழக்கு நாகூர் ஆண்டகையின் பேரர் புனித பக்ருத்தீன் என்பவரது அடக்க இடம் உள்ள குடியிருப்பு. புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டு