பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 59 கும், தேவர் கட்டளையை நிறைவேற்றிவைப்பதற்கும் இவர் களுக்கு காணியாட்சி உரிமைகளும் அளிக்கப்பட்டு இருந்தன. இஸ்லாமியர் துலுக்கரில் கடல் வாணிபம் செய்தவர்கள் மரைக்காயர் அல்லது சோனகர் என்றும், அரசு சேவை, போர்த்தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் ராவுத்தர் எனவும் இவையல்லாத நெசவு போன்ற தொழில்களில் ஈடுபட்டவர்கள் லெப்பைகள் எனவும் வழங்கப்பட்டனர். இந்தப் பிரிவுகள் அனைத்துப் தொழிலைக் கொண்டு எழுந்த பெயர்ப்பிரிவுகளே தவிர சாதிப் பிரிவுகள் அல்ல. இசுலாமியர் மிகுதியாக இன்றும் வாழும் கமுதி அபிராமம், எக்ககுடி, பரமக்குடி, இளையாங்குடி, சித்தார் கோட்டை பனைக்குளம், ஆகிய ஊர்களில் பாவோடித்தெரு' என்ற பெயர்கள் நிலைத்து இருப்பது இந்த உண்மையை உறுதிப்படுத்துவது ஆகும். ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகப் பிரதிநிதி ஒருவரது கி. பி. 1794-ஆம் ஆண்டு அறிக்கை இந்த ஊர்களையும் சேர்த்து சேதுபதி சீமையில் பதின் மூன்று கிராமங்களில் 980 தறிகள் இருந்ததைக் குறிப்பிடுகிறது. ” இடையர் பலநூற்றாண்டுகளாக ஆடு மாடுகளைக் கொண்டு தொழில் புரிந்து வந்தவர்கள் சேது நாட்டின் இன்னொரு தொன்மைக் குடி யினரான இடையர் ஆவர். இவர்கள் கடற்கரையல்லாத உள் நாட்டில் பரவலாக இருந்து வந்ததைப் பல செப்பேடுகளில் அவர்கள் இறுத்த வரிகள் பற்றிய விவரங்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த இடைக்குடி மக்கள் இறுத்த வரிப்பாடுகள் கோசாலை வரி, நன்மாட்டுவரி, கீதாரம். எருதுவரி, சுரபிக்காத பசு வரி, பேடிவளி என்பன. ஆடுமாடுகளை வைத்துப் பராமரித்து வாழ்க்கை நடத்தியவர் கீதாரி எனப்பட்டனர். இந்த மக்களில் ஒருசிலர் விவசாயத்தில் ஈடுபட்டு இருந்தனர். இவர்கள் முக்கந்தர் என வழங்கப்பட்டனர். கீதாரி, முக்கந்தர் என்ற இரு சொற்களும் ஆயர் குடியில் வளர்ந்த கிருஷ்ணனைக் குறிக்கும் கிரிதாரி, முகுந்தன் என்ற பெயர்களின் திரிபு. இவர்கள் நாட்டு இடையர் எனபட்டனர். பல்லக்கு துரக்கும் பணியில் இன்னொரு பிரிவினர் 15. Public consultations Vol. 1182 A-12-2. 1793 pp. 851-862