பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 61 - - - - - - - களுக்கு எண்ணெய்க்காப்பிடுவதற்கு எண்ணெய்வழங்கும் பொறுப் பினை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் மரத்தினாலும், கல்லி னாலும் ஆன செக்குகளை அமைத்திருந்தனர். கேரள சிங்கவள நாட்டில் (இன்றைய காரைக்குடிப் பகுதியில்) மிகுதியாக இத்தகைய செக்குகள் அமைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அந்த பகுதி செக்கு ஆலை என்றும் செக்காலைக் கோட்டை என்றும் வழக்குப்பெற்றுள்ளது. இத்தகைய செக்குகளுக்கு சேது நாட்டில் செக்கு இறை என்ற வரிப்பாடு இருந்து வந்தது. சிரேட்டி என்ற வடசொல் செட்டி என வழக்குப் பெற்றாலும் அந்த சொல் குறிப்பிடுகின்ற வணிகர் என்ற பொருளில் பல செட்டி வகுப்பினர் இருந்தாலும், எண்ணெய் வணிகம் செய்கின்ற இந்த வணிக மக்கள் வானியர்என்றும், வாணிகச் செட்டி என்றும் வழங்கப்பட்டனர். இவர்களைத் தவிர, இன்னொரு செட்டி வகையினரும் சேதுபதி சீமை குடிமக்களாக இருந்தனர். அவர்கள் தான் நாட்டுக் கோட்டையார் நகரத்தார்’ எனப்படும் செட்டி மக்கள். இவர்களைப் பற்றிய இந்தச் செய்திகள் செப்பேடுகளில் காணப்படவில்லை.

  • Frror/r/f

இவர்களது பரம்பரைத் தொழில் பனைமரத்தில் இருந்து கள் வடித்தல். இந்து ஆகம நெறிகள் மனித வாழ்க்கைக்கு ஆகாதவை எனக் குறிப்பிட்டுள்ள கள் தொழிலை இந்த மக்கள் மேற்கொண்டு இருந்ததால் இவர்களை இந்து சமூகத்தினர் தீண்டத்தகாதவர்களாகக் கருதிய காலமும் முன்னர் இருந்தது. பனை மரம் ஏறுவதற்கு கால்களில் பிணைத்துக்கொள்ளும் சாண் அளவு பனைநார் என்ற சொற்களிலிருந்து இவர்களுக்கு சாணார் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் இத்தகையப் பெயர் குறிப்பிடப்படவில்லை. இலக்கண கால்களிலும்-பிங்கலந்தை நிகண்டிலும், சூடாமணி நிகண்டிலும்-இந்தச்செயல் பட்டியல் இடப்படவில்லை. செளந்தி கர் என்ற வடசொல் சூடாமணி நிகண்டில் கள் வடிப்பவருக்கு குழுஉக்குறியாக குறிபிடப்பட்டதிலிருந்து சாணார் என்பதற்கு வேர்ச்சொல் செளந்திகர் எனக் கருதப்படுவதும் உண்டு. 17. Edgar Thurston – Castes and Tribes of South India. (1909) Vol. IV. page. 369.