பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 எஸ். எம். கமால் இந்த மக்கள் சான்றார்' என அழைக்கப்பட்டனர் என்பது ஒரு செய்தி. இதற்கான இலக்கண இலக்கிய ஆதாரங்கள் இல்லையென்றாலும் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த திருப்புல்லாணி திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் சான்றார் உள்ளிட்ட சாதிக்கு என்ற தொடர் காணப்படுவது ஆய்வுக் குரியது. உலக வழக்கில் அன்றும் இன்றும் இவர்கள் சாணார் களாகவே உள்ளனர். சானார்வரி, பனங்கடமை, கலவஈழம், ஈழம் புஞ்சைவரி இந்த வரிப்பாடுகள் இவர்களிடமிருந்து வசூலிக்கப் பட்டு வந்தன. o வரிப்பாடுகள் சேது நாட்டுக் குடிமக்களிடமிருந்து பள்வரி, பலவரி. சொர்ணாதாயம், கோசாலை வரி, நன்மாட்டுவரி, மகாநவமி கிடாய் வரி, மானோம்புக் கிடாய் வரி, செம்பு வரி, களஞ்சிய வரி, மடத்து வரி, உசாடி வரி, எழுத்தாணி வரி, கம்பள வரி, கீதாரம், கலவஈழம், புஞ்சை வரி, கொல்லர் வரி, தச்சர் வரி, சாணார் வரி பனங்கடமை, திருகை வரி, பாசி வரி, பலபட்டடை வரி, எருது வரி, கத்திப்பெட்டி வரி, செக்கு வரி, உழக்கு வரி, நிலவரி மனை வரி, கூரை வரி, கல் வரி, தட்டு வரி, கொடிக்கால் வரி, புகையிலை வரி, கொத்துக்கணக்கு வரி, வேண்டுகோள் வரி, வரிசை வரி, ஆகிய வரிப்பாடுகள் தண்டல் செய்யப்பட்டு வந்தன இவைகளில் பல வரி பள் வரி என்ற வரிப்பாடுகளும் சேதுபதிச் சீமை முழுவதும் அமுல்படுத்தப்பட்டதாகும். ஆனால் இவைகளில் பெரும்பாலானவை பதினேழாம் நூற்றாண்டில் வடக்குப் பகுதியை விட தென் பகுதியில் தான் இறுக்கப்பட்ட தாகச் செப்பேடுகளில் காணமுடிகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டிலும் இந்த வரிப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருந்தனவா என்று அறியத்தக்கதாக இல்லை. ஆனால், அம்பலம், காடு காவல், உழவு, காவல் சுவந்திரம், இடைகுடி வரி, கீதாரி வரி, துலுக்கர் தறிக்கடமை, செக்கு வரி, கடைவரி, பறைவரி, முள்ளுவரி, காணிக்கைவரி, இடங்கைவரி, வலங்கைவரி, சுங்கம், மகமை, பலவரி, பள்வரி 18. AR. 114/1903.