பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 எஸ். எம். கமால் தங்களது அழகிய கருங் கூந்தலைக் கங்காதேவிக்குக் காணிக் கையாக திரிவேணி சங்கமத்தில் அர்ப்பணம் செய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. பாஸ்கர சேதுபதி மன்னர் திருக் கோவில்களுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அவர் புனைந்திருந்த அரிய அணிமணிகளில் ஒன்றை அந்தக் கோயிலுக்குக் காணிக்கை யாக அளிக்கும் வழக்கத்தையுடையவராக இருந்தார். அவரது முன்னோர்களும் சேது நாட்டின் ஆட்சிப் பொறுப்பையேற்று சேதுபதியாக பட்டம் சூட்டிக் கொண்டவுடன் தங்களது இதய தெய்வமாகிய பூரீ இராமநாதசுவாமிக்கு ஒரு கிராமத்தைக் காணிக்கையாக வழங்கும் மரபினைப் பேணி வந்தனர். இதற்கு பட்டக்காணிக்கை எனப் பெயராகும். இவ் விதம் கொடுக்கப்பட்ட காணிக்கை ஊர் ஒன்று கமுதி வட்டத்தில் இன்றும் காணிக்கூர் என வழங்கப்பட்டு வருகிறது. அரசுக்குச் செலுத்தும் வரிகளில் ஒன்றாகக் காணிக்கை வரி செலுத்தி வந்ததை சேது மன்னர்கள் செப்பேடுகளில்தான் காணமுடிகின்றது. இறைவனுக்கு அடுத்த நிலையில் மன்னரை வைத்துப் போற்றிய மக்கள், மன்னருக்கு வழங்கும் வரியினைக் காணிக்கையாகக் கருதியதில் வியப்பு இல்லை. அரசுக்கு இறுக் கப்பட்ட பலவிதமான பாட்டங்களும் இறைகளும் வரிகளும் அந்த மக்களது நலனுக்காகவே தண்டல் செய்யப்பட்டது. மன்னரது சொந்தச் செலவுக்கென்றே தனியாக இந்த வரியினை மக்கள் அன்புடன் செலுத்திய காரணத்தால் காணிக்கைவரி:எனப் பெயர் பெற்றிருக்கலாம். பழக்க வழக்கங்கள் மறவர் சீமையில் பலதரப்பட்ட மக்களும் ஒரு குடும்பம் போல பல்லாண்டுகளாக ஒன்றிணைந்து வாழ்ந்து வந்தனர். அவர்களிடையே சாதிப்பிரிவினை போன்ற முந்தையச் சமு தாயத்தின் எச்சங்களும் மாற்றமில்லாது இருந்து வந்தன, என்பதைச் செப்பேட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 1. சாதிப்பிடிப்பு அன்றைய நிலையில், அகம்படியரும், வலையரும் ஒரே மாதிரியான தகுதியுடையவராக இருந்தாலும் அகம் டியர் சமூகத்தைச் சேர்ந்த நயினுக்குட்டி சேர்வைக்காரன் எ ன்ற