பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/886

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 71 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : திருவாவடுதுறை ஆதின பண் டார சன்னதி 3. செப்பேட்டின் காலம் : சகம் 1703 பிலவ ஆண்டு தனுர் மாசம் (கி.பி. 2-1-1782) 4. செப்பேட்டின் பொருள் : மயேச்சுர பூசைக்கு வல்லைக் குளம் தானம் இந்தச் செப்பேட்டினை வழங்கிய சேதுபதி மன்னரது விருதாவளியாக இருப்பத்தியேழு சிறப்புப்பெயர்கள் மட்டும் காணப்படுகின்றன. இவையனைத்தும் முந்தையச் செப்பேடு களில் பயன்படுத்தப்பட்டவை. -- இராமேசுவரம் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக சேது மன்னர்களது தானங்களை திருவாவடுதுறை ஆதினம் பெற்று வந்துள்ளது. ஏற்கனவே இந்தமடத்தின் அம்பலவாண நாத சன்னதியில் மயேச்சுர பூசைக்காக, பொசுக்குடி, நாட்டுசேரி ஆகிய ஊர்களை முந்தையச் சேது மன்னர்கள் தானம் அளித் துள்ளனர். அந்தப் பூசையின் சிறப்பைக் கருதி இந்த மன்னர் வல்லைக்குளம் என்ற ஊரினை அதே தர்மத்திற்கு தானமாக வழங்கி உள்ளனர். இந்த ஊர் இன்றைய முதுகுளத்துார் வட் டத்தில் தென்கிழக்குப் பகுதியில் சிக்கிள் என்ற ஊரின் மேல் புறமாக அமைந்துள்ளது. இந்த ஊரின் எல்லைகளை செப்பேட் டில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கில், பனிவாசல், கடம்போடை, ஆய்க்குடி, சிக்கில் கண்மாய், அன்னுணிக் கண்மாய், இராமநாத