பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/898

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 எஸ். எம். கமால் இராமநாதபுரம் கோட்டைக்குக் கிழக்கே இரண்டு கல் தொலைவிலுள்ள லட்சுமிபுரத்தில் முத்துராமலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளது. இதனை எடுப்பித்தவர் முத்து விஜய ரெகுநாத சேதுபதியாகும். மிகுந்த அழுத்தமான சிவபக்தர் என்ற வகையில் அந்த மன்னர் நாள்தோறும், இராமேசுவரம் திருக்கோயிலுக்குச் செல்ல இயலாத நிலையில், இராமேசுவரம் இறைவனை இராமநாதபுரத்திலேயே பூஜிப்பதற்காக இந்தக் கோயிலை நிறுவினார் என்ற செய்தி இராமநாதபுரம் மேன் யுவலில் காணப்படுகிறது. இந்த மன்னரை அடுத்துப் பட்ட மேறிய செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி என்பவர் இந்த ஆலயத்திற்கு அண்மையில் செல்லபூபாலசத்திரம் என்ற பெயரில் அன்ன சாலை ஒன்றை அமைத்துள்ளார். இந்தக் கோயிலின் வடக்குப் பகுதியில் சமரச சன்மார்க்க சித்தாந்தம், கண்ட தாயு மான அடிகளது சமாதியுற்ற தோட்டமும் உள்ளது. இந்தக் கோயிலின் பராமரிப்புக்காக சொக்கானை, மத்தி வயல் என்ற இரு கிராமங்களை சர்வமான்யமாக வழங்கி யுள்ளதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. அந்தக் கிராமங் களுக்கான நான்கு எல்கை விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல், சிறைக்குளம், கழுநீர்மங்கலம், பேய்க்குளம் ஆகிய நான்கு ஊர்களும் இன்றும் வழக்கில் உள்ளன. ஆனால் வல்ல பாடல் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஊர்மட்டும் வல்லக்குளம் என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இந்த ஊர்கள் அனைத்தும் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் வட்டத்தில் உள்ளன. பாடல்’ ’ என்ற பெயர் விகுதியுடைய இன்னொரு ஊர் வல்லபாடல் கிராமத்திற்கு வடகிழக்கே ஐந்துகல் தொலைவில் உள்ள இதம் பாடல் ஆகும். இத்தகைய பாடல் என்ற பெயர் விகுதிகளையுடைய ஊர்கள் தமிழகத்தில் வேறு எங்கும் இருப்ப தாகத் தெரியவில்லை.