பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii துத் தந்திருப்பது பாராட்டுதலுக்குரியதாகும். இச்செப்புப் பட்ட யங்கள் மூலமாக தெரிய வருகின்ற சீமைகள், நாடுகள், கூற்றங் கள். பற்றுகள், வட்டகைகள், புறவுகள் ஆகியவை வரலாற்றில் ஆர்வம் கொண்டு ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு அரிய கரு வூலங்களாக அமைந்துள்ளவை ஆகும். சேதுபதிகளின் காலத் தில் வட்டாரம், வட்டகை, தட்டு, சேர்வை என்ற சொற்கள் நாட்டுப் பகுதியின் பிரிவுகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத் பட்டன என்பது இச்செப்புப் பட்டயங்கள் தரும் புதிய செய்தி கள் ஆகும். நீர்த்தேக்கங்களின் பெயர்களும் நிரம்ப காணப்படுகின்றன அவற்றுள் ஆறுகள், ஏரிகள்,ஆறும் கண்மாய்கள் முப்பத்துநான்கும் எந்தல்கள் நாற்பத்து ஒன்றும் ஊரணிகள் இருபத்து ஒன்பதும் குளங்கள் பதினெட்டும் குண்டுகள் இரண்டும் குட்டம் மூன்றும் கால்கள் பதினைந்தும், குளக்கால் நான்கும், வாய்க்கால் ஆறும், ஒடைகள் ஐந்தும், மடைகள் ஆறும் பட்டியலிட்டுத் தந்திருப்பது ஆசிரியரின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்துகின்றது. இச் செப்புப் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ள நிலங்களின் வகை களையும் ஆசிரியர் தொகுத்துத் தந்திருக்கிறார். அவைகளை இனம்வாரியாகச் செய், புஞ்சை, வயல், தோட்டம், தோப்பு: தட்டு என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மேலும், அக்காலத் தில் இருந்த மக்கள் பிரிவுகளையும் அவர் இச்செப்புப் பட்டயங் கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். மறவர் சீமையில் வழக்கிலிருந்த விழாக்கள் பற்றியும். அப்பொழுது நிகழ்ந்த எல்லைத் தகராறுகள்பற்றியும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், நில அளவைகள் பற்றியும். முத்துச் சிலாப தானம்பற்றியும், ஒவ்வொன்றாக விளக்கியிருப்பது ஆய்வு மாணவர்களுக்கு கிடைத்தற்கரிய பொக்கிஷமாகக் காணப்படுகிறது வருவாய்த் துறையிலே அதிகாரியாக இருந்த இந்த ஆசிரியர், கல்வெட்டு, செப்பேடு ஆகியவற்றின் துணை கொண்டு வரலாறு எழுதுவதில் முனைப்போடு செயல்பட்டு வருகின்றார். தனிப்பட்ட ஒருவர் மேற்கானும் தொண்ணுாறு பட்டயங்களைத் தொகுத்து அதற் காக விளக்கங்களும் தந்து வெளியிட்டிருப்பது வரலாற்று