பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/909

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 75 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதி. 2. செப்பேடு பெற்றவர் : இராஜசிங்க மங்கலம் சங்கர லிங்க குருக்கள் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1705 சோபகிருது ஆண்டு மிதுன ■ மாதம் (கி. பி. 13-6-1783) 4. செப்பேட்டின் பொருள் : மேலேகண்ட குருக்களுக்கு முடித் தனாவயல் கிராமம் சர்வ ԼD fT ՅԾT ԼLI ԼI) - இந்தச் செப்பேட்டை வழங்கிய மன்னரது அறுபத்தி யிரண்டு சிறப்புப் பெயர்கள் இந்தப்பட்டயத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. நிதிக்குக் குபேரன், சொன்னமொழி மாறாத சுமுகன், என்ற இரண்டு சிறப்புப் பெயர்கள் மட்டும் புதுமை யானவை. ஏனையவை முந்தையச் செப்பேடுகளில் காணப் பட்டவையாகும். இராஜசிங்கமங்கலம் கைலாசநாத சுவாமி ஆலயம் எட்டா வது நூற்றாண்டில் வரகுண பாண்டியன் என்ற மன்னரால் நிர் மாணிக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் பூஜாகரரான சங்கர லிங்க குருக்களுக்கு அதே பகுதியில் உள்ள முடித்தனாவயல் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இராஜசிங்கமங்கலம் இராஜசிம்ம பாண்டியன் என்ற மன்னரது நினைவாக வழங்கப்பட்ட ஊர்களில் இந்த மங்கலமும் ஒன்று. ஊரின் தென்கிழக்கே ஐந்து கல் தொலைவில்