பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/935

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு ബ്ഞ് 80 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : சேதுபதி மன்னரது தமயனார் முத்து வயிரவநாதத் தேவர் 2. செப்பேடு பெற்றவர் : பொன்னெட்டி மாலை சக்கரைப் புலவர் =3. செப்பேட்டின் காலம் : சாலிவாஹன சகாப்தம் 1638 கர வருடம் கார்த்திகை மீ” (கி, பி. 1711) 4. செப்பேட்டின் பொருள் : புலவருக்கு கோடகுடி கொ லன் வயல் என்ற கிராமம் தானம் - இந்தச் செப்பேட்டில் இராமநாதபுரம் மன்னரது விஜயரகு நாத சேதுபதியின் விருதாவளியாக ஐம்பத்து ஏழு சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் பரத வித்யாதரன் இயல் இசை வித்யாதரன் என்ற இருவிருதுகள் மட்டும் புதியன வாகவும் அமைந்துள்ளன. இந்தச் செப்பேடு அந்த மன்னரது மையனாரால் வழங்கப் பட்டிருப்பதால், இதனை அரசவழியினர் செப்பேடாக கொள்ளப் பட்டுள்ளது. கி.பி, 1710ல் ரெகுநாத கிழவன் சேதுபதி கால மான பொழுது ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் அவரது தங்கை மக்களில் மூத்தவரான முத்து வயிரவநாதத்தேவர் புறக் கணிக்கப்பட்டு இளையவரான திருவுடையாத் தேவர், விஜய ரகுநாத சேதுபதியாக பட்டம் சூட்டப்ப்பெற்றார். என்றாலும், முத்து வயிரவ நாதத்தேவர் தமது தம்பியின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பொறுப்பான பதவி ஒன்றிலிருந்து இந்தச் செப்பேட் o -- டினை வழங்கியுள்ளார்.