பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο எஸ். எம். கமால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சேதுபதி மன்னரது ஆட்சியில் இத்தகைய வழக்குகளுக்கு நியாயத் தீர்வு எவ்விதம் பெறப்பட்டது என்ற சிறப்பான செய்தியினை அந்தப்பட்டயம் தெரிவிக்கின்றது. வழக்கினைத் தீர்வு செய்வதற்கு நியமனம் பெற்ற நடுவர் குழு, வழக்கினைத் தொடுத்தவர்கள், மறுத்தவர் கள் ஆகியோரது வாய்மொழியினை முதலில் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். பின்னர் முறிநறுக்குச் செய்தி, அட்டவனை இராமநாதபண்டாரத்திடம் உள்ள பழைய செப்பேடுகள், செய்தி அட்டவணைகள் முன்னுாற்றுப்பதினேழு வருடங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட செய்தியட்டவணை, சடைக்கன் சேதுபதி, திருமலை சேதுபதி, விஜயரெகுநாத சேதுபதி ஆகியோரது ஆட்சிக்காலம் சம்பந்தப்பட்ட நடப்புகள் ஆகியவைகளை அடுத்து பரிசீலித்து இறுதியாக நல்ல தீர்ப்பு வழங்கியதாகத் தெரிகிறது. (செ. எண். 86) நிலஅளவை நீண்ட நெடுங்காலமாக சேதுபதிச் சீமையின் நிலங்களை அளந்து கணக்கிடுவதற்கு குளப்பிரமாணம் என்ற முறை கையாள பட்டு வந்தது. இதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல் மாகாணிக்கோல் என்ற மரக்கோல் ஆகும். இத அடைய அளவை ஒரு கோலுக்கு ஒரு கோல் என்ற பரப்பு ஒரு மரக்கால் விரையடி என்றும், பதினான்கு கோலுக்கு பதினான்கு கோல் பரப்பு ஒரு கல விரையடி என்றும், நிர்ணயிக்கப்பட் டிருந்தது. இந்தச் செப்பேடுகளில் குறிப்பிடப்படுகின்ற மரக்கால் விரையடி, கலம் விரையடி, என்பன முகத்தல் அளவைக் குறி யீடுகள் அல்ல. விதைப்பாட்டிற்குரிய பரப்பு நிலம் விரையடி எனப் பட்டது. கல விரையடி என்பது இன்றைய நீட்டல் அளவை முறையில் ஒரு ஏக்கர் பதினேழு செண்ட் நிலப்பரப்பாகும். 8ణ్ణి சென்ட் பரப்பு நிலம், ஒரு மரக்கால் விரையடிக்குச் சமமானது. இந்தச் செப்பேடுகளில் குறிப்பாக நிலக்கொடை பற்றியவைகளில் குறிப்பிடப்படும் இந்த அளவை பற்றியவைகளில் குறிப்பிடப்படும் இந்த அளவை இப்பொழுது அமுலில் இல்லை. சேதிபதி சீமை யில் அமுலில் இருந்த இத்தகைய கோல்’ ஒன்றின் சரியான வரை படம் (இன்றைய நான்கு அடி நீளம்) இராமேசுவரம் திருக்கோயிலின் முதற்பிரகாரத்தின் மேற்கு மதிலில் வினாயகர் ஆலயத்திற்கு தெற்கே பொறிக்கப்பட்டு இருக்கின்றது.