பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/941

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 631


  • - - -

அழகர் மதுரைக்கு எழுந்தருளுவதை ஒட்டி அங்கு கூடுகின்ற பெருந்திரளான மக்களது நன்மைக்காக இந்த தர்மம் ஏற்படுத்தப் பட்டது. இதே வயிரவனாத தேவரது புண்யமாக திருவாடானை திருக்கோயில் புஷ்கரணி திருக்குளம் ஆழப்படுத்தப்பட்ட கல்வெட்டுச் சேய்தியும் உள்ளது. இது கி.பி. 1720ம் ஆண்டு நிகழ்ச்சியாக இருப்பதால் தொடர்ந்து தமது சகோதர மன்ன ருக்கு இவர் துணையாக இருந்து வந்தவர் என்பது தெளி வாகிறது. இந்த இரு கிராமங்களின் வருவாயில் பகுதியை- அர்த்த பாகத்தை அனுபவித்து வந்த அழகர் திருமலையைச் சேர்ந்த உபய வேதாந்தாச்சாரியான திருமலையாண்ட திருவேங்கடச் சாரியாரே இந்த தானத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த கிராமங்களின் அர்த்தபாகத்தை இந்த பரம வைஷ்ணவர் எந்த மன்னரிடமிருந்து பெற்றுக்கொண்டார் என்பது அறிய தக்கதாக இல்லை. செப்பேட்டில் பூர்வாபூர்வமாக அனுபவித்து வருகின் றனர் என்ற விபரம் தெரியவருகிறது. இந்த செப்பேட்டில் கண்ட இரண்டு ஊர்களும் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் பரமக் குடி வட்டத்தில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ளன. இந்த ஊர்களிலிருந்து இறுக்கப்பட்ட பல வரி, வெட்டி வரி, சொர்ண ஆதாயம் ஆகிய வருவாய்களைக் கொண்டு ஆண்டுதோறும் ஊரணி தர்மம் நடத்தப்பட வேண்டும் என்ற நியதியையும் இந்தச் செப்பேட்டில் காணமுடிகின்றது. சேது நாட்டுக்கு வெளியே சேதுபதி மன்னர் மேற்கொண்ட அன்ன சத்திரப்பணி இது ஒன்று மட்டும்தான். சிவபூஜா துரந்தரரான சேதுமன்னர்களும் இவர்களது வழி யினரும் அவர்கள் வழிபடும் இறைவனுக்கு மட்டுமல்லாமல் வைணவ திருக்கோயில்களுக்கும் இத்தகைய கொடையினை வழங்கி இருப்பது அவர்களது சமயப் பொறைக்கும், சமரச நோக்கிற்கும் ஏற்றதொரு எடுத்துக் காட்டாகும். † A. R. 436 | 1914 திருவாடானை திருக்கோயில்.