பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 எஸ். எம். கமால் இராமேஸ்வரம், திருப்புல்லாணி, திருப்பெருந்துறை திருக்கோ யில்களுக்கு வழங்கியதை செ.எண். 4, 35, 43 தெரிவிக்கின்றன. இந்த தானங்களை உறுதிப்படுத்தும் வகையில் இராமேசுவரம், திருப்புல்லாணி, திருக்கோயில் படகுகள், சில முத்துச்சிலாபங் களில் பங்குகொண்ட செய்திகள் உண்டு. ஆங்கில அரசு இந்த நாட்டில் நிலைத்த பிறகுதான், புனித திருக்கோயில்களின் இந்த உரிமை புறக்கணிக்கப்பட்டது.* சேதுக்கரை : சேது மன்னர்களது பட்டயங்களில் பெரும்பாலும் சேதுக் கரையில்'தானம்வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.அதே போல அந்தப் பட்டயங்களின் இறுதி வாக்கியங்களிலும் இந்தப் புண்ணியத்தைப் பரிபாலனம் செய்தவர் சேதுக்கரையில் கோடி சிவலிங்கப் பிரதிட்டை பண்ணின பலத்தையும் , இந்த தர் மத்திற்கு அகிகம் நினைத்தவர்கள் சேதுக்கரையில் மாதா, பிதா குருவையும், காராம் பசுவையும், பிராமணனையும் கொன்ற தோசத்திலே போகக் கடவாராகவும் என்று குறிப்பிடும் வழக்க மிருந்து வந்தது. கம்பராமாயண யுத்த காண்டத்தில் புனிதமிக்க கங்கை நதியும், சேது ஆக பெற்றிலம் என வருந்துவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்விதம் புனிதமிக்க இடமாகக் கருதப்படும் சேதுக்கரை எது? தமிழ்மொழியின் கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி நளன் என்ற வானர தச்சனால் நூற்றிரண்டு யோசனை நீளமும் பத்துயோசனை அகலமும் உடையதாக அமைக்கப்பட்டது சேது அணை என்றும், அது இராமேசுவரத் திற்கும் இலங்கைக்கும் மிடையால் அமைந்துள்ளது என்றும் வரையப்பட்டுள்ளது. ஆனால் கன்னியாகுமரிப் புராணம் பாடிய சங்கர நாவலர் கடலுடைச் சேது ஒன்று கட்டிட கருத்தில் உள்ளிய இராம இலக்கு வர்கள் திடலுறு குமரியென்னும் தென்கடற்கரை வந்து சேதுவை அமைத்ததாகப் பாடியுள்ளார். ஐம்பெரும் காப்பியங்களில் 22. Arunachalam. S. History of Pearl Fishery of Tamil coast. (1952) pp. 113, 114. Tamilnadu Archives-Madras Dist. vol. 4670/1-1–1822 p.20