பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/965

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 655 மலை சேதுபதி மன்னரது அரசப் பிரதிநிதியாக இருந்தபொழுது அங்கு அவர் இத்தகைய அறக்கொடைகளை மன்னரது பெயரால் வெளியிட்டிருப்பதை புதுக்கோட்டைச் சீமைக் கல் வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. அவையாவன : 1. சகம் 1585-ல் (கி.பி.1663-ல்) மேலையூர் விண் ணகர பெருமாளுக்கு திருவிடையாட்டக் காணியாக பெரியவராயன் வயல் முதலிய காணிகளை சர்வமாயமாக வழங்கியிருப்பது. 2. திருமயம் அழகியமெய்யருக்கு சகம் 1579-ல் (கி.பி. 1657) பிரம்மதாயமாகவும் தெய்வதாயமாகவும் கோட்டையூர் புரவில் காணிகளை வழங்கியிருப்பது. 3. திருமயம் விராச்சிலை உலகவிடங்கன் சுவாமிக்கு பல்லக்கு சேவை, பிராமண போஜனம், திருப்பணி ஆகிய தர் மங்களுக்கு விரகண்டன் பட்டி என்ற ஊரினை குடிநீங்கா தேவதானமாக வழங்கியிருப்பது - - இந்த மன்னரை அடுத்து வந்த கிழவன் சேதுபதி முத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆகிய மன்னர்கள் காலத்திலும் இதே மரபு. கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. - ா - செப்பேடு வழங்கியுள்ளவர் சொக்கப்பன் சேர்வை மகன் பெருமாள் சேர்வை என்று குறிப்பிட்டிருப்பதால் இவர் இராம நாதபுரம் பகுதியில் கணிசமான அளவில் உள்ள அகமுடையார் மக்கள் இனத்தைச்சேர்ந்தவர் என்பது வெளிப்படை. 'சேர்வை' என்பது பொதுவாக சேவை, பணி, என்ற பொருளினைத் தந் தாலும் சேதுபதி மன்னரது படை அணிப்பிரிவிலும் தேச காவல் திசை காவல் பணியிலும் மிகுதியாக ஈடுபட்டு இருந்த அக முடையார் சமூகத்தினரைக் குறிக்க இந்த சொல் வழக்கில் வந்துள்ளது. மற்றும் சிறப்பாக போர்த்திறனில் விஞ்சி நின்ற மறவர், இசுலாமியர் இனத்தவர்களைக் குறிப்பதற்கும் இந்தச் சொல் ஒரே வழி கையாளப்பட்டுள்ளது. குறிப்பாக போக லூரைச் சேர்ந்த இசுலாமியரான கனி சேர்வைக்காரர் சித்திரங் குடியைச் சேர்ந்த மறவர் தலைவரான வெள்ளையத்தேவர் மயிலப்பன் சேர்வைக்காரர் ஆகியோர்கள் இந்த சொல் வழக் கிற்கு சிறந்த உதாரணங்கள் ஆவர்.