பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/993

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 683 புராணத்தில் மதுரைத் திருக்கோயிலின் இறைவர் சொக்கநாதர் நிகழ்த்திய அறுபத்திநான்கு திருவிளையாடல்களில் ஐம்பத்தி யேழாவது திரு விளையாடலில் திருநீலகண்டசிவனார் தமது திருக்குமரன் குமரவேலை மதுரை நகர் செட்டி ஒருவரது மூங்கைப் பிள்ளையாக அவதரிக்கச் செய்யுமாறு சபித்த கதை யினை இந்தச்செப்பேடு நினைவு கூர்கிறது. ஆதலால் இந்த வணிக மக்கள் முருகப்பிரானை தங்களது செட்டு வியாபாரத் துக்கு குருமூர்த்தக் கணத்தவர் என இந்தச்செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளனர். (வரிகள் 36, 37) . இந்த தர்மத்தை நிறைவேற்றி வைத்த சுகிர்தத்திற்கும் அகிதம்பண்ண நினைத்தவர்களுக்கும் முறையே ஏற்படும் பலன் களையும், பாதகங்களையும் இந்தச் செப்பேடு சுட்டிக்காண் பித்தபோதிலும் இந்த மகமை இன்று - ஏன் பல நூற்றாண்டு களாகப் பின்பற்றப்படவில்லை. சமயத்தை வாழ்க்கையின் செம்பாகமாகக் கொண்டொழுகும் பண்பு மக்களிடம் மறைந்து விட்டதும் அதனை ஊக்குவித்த அரசியலமைப்பு நாளடைவில் அடியோடு மாறிவிட்டதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இன்னொரு செய்தியையும் இந்தச் செப்பேடு குறிப்பிடு கின்றது. பொதுவாக செப்பேடுகளைத் தயாரிப்பதற்கு முன்னர் அதில் வரையவேண்டிய பொருளை முதலில் ஏட்டில் எழுதி படித்துக்காண்பித்து, சம்பந்தப்பட்டவர்களது இசைவினைப் பெற்ற பின்னரே அதனை வரைந்தனர் என்பதாகும். இந்தச் செய்தியை தங்களது இருகரங்களாலும் தொட்டுக்கொடுத்த பின்னர் என்ற செப்பேட்டு வரி தெரிவிக்கின்றது.