பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/999

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 89 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : இராமேசுவரம் திருக்கோயில் இராமநாத பண்டாரம். செப்பேடு பெற்றவர் : ஆரிய மகாஜனங்கள். 3. செப்பேட்டின் காலம் : நந்தன ஆண்டு ஆவணி மாதம் 17ந் தேதி (கி. பி. 28 8-1772) 4. செப்பேட்டின் பொருள் : இசைவு முறி இராமேஸ்வரம் திருக்கோயில் மடாதிபதி இராமநாத பண்டாரத்திற்கும் அந்தக் கோயிலின் பூஜகர், குருக்கள், சபையார், நயினாக்கள், ஸ்தானிகர் ஆகிய மகாஜனங்கள் 512 பேர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. தன்னரசு மன்னர்களாகத் திகழ்ந்த சேதுபதிகளில் கி.பி. 1760 வரை ஆட்சி செய்த செல்லமுத்து ரெகுநாத சேதுபதி ஆண் வாரிசு இல்லாமல் இறந்த பொழுது, அவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியாரது மகன் ஒராண்டு கூட நிறைவு பெறாத பாலகன் முத்துராமலிங்கம் சேதுபதி மன்னராக அறிவிக்கப்பட்டார். கி. பி. 1741 முதல் தென் மாநிலங்களின் நவாப்பாக நியமனம் பெற்ற வாலாஜா முகம்மது அலி, மறவர் சீமையும் தமது ஆதிக்கத்துக்கு உட்பட்டது எனக்கூறி சேதுபதி யிடம் கப்டம் கோரினார். அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதால் இராமநாதபுரம் கோட்டையை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி யின் கூலிப்படை உதவியுடன் தாக்கி 3-6-1772ல் மறவர் சீமையை தனது உடமையாக ஆக்கிக் கொண்டதுடன் இளைஞ ரான சேதுபதியையும் அவரது குடும் டத்தினரையும் திருச்சிக் கோட்டையில் சிறை வைத்தார்.