பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

சேதுபதி மன்னர் வரலாறு

அரசின் ஆதரவு இல்லாததால் அவைகளை மூடவேண்டிய கட்டாயச் சூழ்நிலை. இன்னும் மருத்துவ வசதி, சாலை வசதி போன்ற இன்றியமையாத உதவிகளையும் ஆங்கில அரசு செய்ய முன் வரவில்லை. அவர்களது ஒரே பணி விவசாய மக்களிடமிருந்து தீர்வையைச் சரிவர வசூலிப்பது மட்டும் குறிக்கோளாக இருந்தது. கி.பி. 1940, 45-ல் தேசிய இயக்கம் விறுவிறுப்பு அடைந்த நிலையில் இன்றைய தேசிய காங்கிரஸ் சென்னை மாகாணத்திலுள்ள ஜமீன்தாரி பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற விவசாயிகளது இடர்பாடுகளை ஆய்வு செய்வதற்கு ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலுவின் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவின் ஒருமித்த முடிவுப்படி கி.பி. 1947-ல் இந்திய தேசிய காங்கிரஸினர் சென்னை மாநில ஆட்சியை முதன்முறையாக கைப்பற்றியவுடன் ஜமீன்தாரி ஒழிப்பு மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றினர்.

இந்தச் சட்டத்தின் மூலம் உழைப்பவருக்கு நில உரிமை வழங்கப்பட்டது. ஆனால் சேது மன்னர்கள் ஆட்சியில் வழங்கப்பட்ட பல சலுகைகள் குடிமக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. சமுதாயப் பணிகள், ஆன்மீகத் தொண்டுகள், தமிழ்மொழி வளர்ச்சி, நாட்டுப்புறக் கலைஞர்களது நலிவை நீக்கி அவர்களது கலைத்திறனை ஊக்குவித்தல் போன்ற இலக்குகள் இனிமேல் தான் எட்டப்பட வேண்டும்.



II சில முக்கிய நிகழ்வுகள்

இன்றைய இராமநாதபுரம் அரண்மனை கி.பி. 1690-95 முதல் சேது நாட்டு நிர்வாகத்திற்குச் சிறப்பிடமாக அமைந்து வந்துள்ளது. அங்கு நடந்த சில முக்கிய நிகழ்வுகளைக் கூட அறிந்து கொள்ளத்தக்க ஆவணங்கள் கிடைக்கவில்லை எனினும் பல துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில நிகழ்வுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

1. மதுரை கத்தோலிக்க திருச்சபையின் ஆவணங்களிலிருந்து தொகுக்கப்பட்டது. மதுரை திருச்சபையைச் சார்ந்த ஜான் டி பிரிட்டோ பாதிரியார் கி.பி. 1692-ல் ராஜ அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டு இராமலிங்க விலாசம் அரண்மனையில் விசாரிக்கப்பட்டதும் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னரது இரகசிய ஆணையுடன் ஓரியூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டு 4.2.1893-ல் கொலை செய்யப்பட்டதும் ஆகும்.

2. முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் ஆட்சியில், தஞ்சை, மதுரை நாயக்க மன்னர்களைப் போன்று தெலுங்கு மொழியும் சேது மன்னரது