பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

189

இராமநாதபுர சமஸ்தானம் ஆவணங்களின்படி


திருக்கோயில்
இணைப்பு அ 59 311
இணைப்பு ஆ
(கட்டளை)
11 36
இணைப்பு இ
(சத்திரம்)
28 61
மொத்தம் 98 408


நிலையாமையை நிரந்தர அணிகலனாகக் கொண்டது தான் இந்த உலகம் என்று வள்ளுவம் தெரிவிக்கிறது. மனித வாழ்க்கையில் மரணம் எப்பொழுது சம்பவிக்கும் என்பதை யாரும் அறிந்திலர் என்றாலும் மனிதன் இந்த உலகில் எத்தனையோ நூற்றாண்டுகள் வாழப்போவதாக நினைத்துப் பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றான்.

இதற்கு விதிவிலக்காகச் சேதுபதி மன்னர்கள் ‘அன்றறிவான் எண்ணாது அறஞ்செய்க” என்ற வள்ளுவத்தின்படி பல அரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர். அவைகளின் ஒரு பிரிவான சமயப் பொறைக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அவர்கள் அளித்துள்ள நன்கொடை பட்டியல்தான் முன்னர் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தனை அறக்கொடைகளை வழங்கிய சேதுபதி மன்னர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது இவர்களுக்கு ஈடாகத் தமிழ்நாட்டில் வேறு எந்த அரச மரபினரும் இருந்தது இல்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றது. காலமெல்லாம் இந்த தர்மங்கள் நிலைத்து நின்று மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனச் சிந்தித்துச் செயலாற்றிய இந்த அரச மரபினரை மனிதகுலம் என்றும் மறக்காது என்பது உறுதி.