பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. தேர்ச்சீலைகள் தொங்கவிடப்பட்ட தேர் என்றும், நெடிய பெரிய தேர் என்றும், வடிக்கப்பட்- மணிகள் கட்டிய தேர் என்றும் மேற்காணும் குறிப்புகளால் தேர்ப் படை பற்றிய செய்தி ஓரளவு விளக்கமுறுகின்றது. இனி, காலாட்படை என வழங்கும் படைவீரர்களின் மேம்பாட்டினையும் அஞ்சாமை இயல்பினையும், வெற்றிச் பிறப்பினையும் விளங்கக் காண்போம். முதற்கண் சேரர் தானைச் சிறப்பினைக் காண் போம். போரில் வல்லதும், கோபம் மிக்கதும், கடல்போல் பரந்ததும், கொலக் கொலக் குறைவு படாததும் சேரர் சேனையாம் என்பது தெரியவருகிறது. 1. போரடு தானை –2; 1: 16; 3; 3: 10 2. ஒல்லார் யானை காணின் நில்லாத் தானை –6; 4: 16-17 3. செருமிகு தானை –7; 3: 12 4. கடல்போல் தானை –7; 9: 3 5. கொலக்கொலக் குறையாத் தானை –9; 2: 13 6. உரவுக் கடலன்ன தாங்கருங் தானை -9; 10:31 இனி, படைமறவர் பற்றிக் கூறப்படுவன வருமாறு: 1. அமர்க்கெதிர்ந்த புகன்மறவர் –3; 2: 20 2. உரும்பின் கூற்றத் தன்ன (கின்) திருந்துதொழில் வயவர் –3; 6: 13-14 3. பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவர்-3; 10:41 4. ஆய்ந்து தெரிந்த புகன்மறவர் –7; 9: 8 போரில் வல்லவர், போரை விரும்புநர், ஆராய்ந் தெடுத்த நல்மறவர் என்றெல்லாம் சேரர் படைமறவர் பெருமை விளங்க உரைக்கப்பட்டுள்ளது.