பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 சேரர் படையினை நடத்திச் செல்லும் தானைத் தலை வனாம் சேரமன்னனின் வீரமும் பின்வருமாறு பாராட்டப் பட்டுள்ளது: 1. போர் பீடழித்த செருப்புகன் முன்ப கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற்றலையே —2:4: 9-10 2. படையே ருழவ –2; 4: 17 3. சிதைந்தது மன்ற சிவந்தனை நோக்கலின்-3; 7:1 4. காலன் அனைய கடுஞ்சின முன்ப –4; 9:8 5. தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல் —4; 10: 16 6. சொல்பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவன் —5; 3: 10-11 7. பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப் புன்கா லுன்னத்துப் பகைவன் எங்கோ -7; 1: 5-6 8. துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே –7; 2: 9 9. உய்தல் யாவது கின்னுடற்றி யோரே —9; 4: 13 10. கொற்றத் திருவின் உரவோர் உம்பல் –9; 10: 24 இவற்றால் சேரர் போர்க் களத்தில் செரு மேம்படு தலில் வல்லவர் என்பதும், கூற்றுவனே எதிர்த்து வரினும் மாற்றும் ஆற்றல் உடையவர் என்பதும், படையையே ஏராகக் கொண்டு உழும் உழவர் என்பதும், அவர்கள் கோபித்துப் பார்த்த பகுதிகள் உறுதியாக அழிந்தன என்பதும், எமன் போன்று போரில் கடுஞ்சினம் கொள்பவர் என்பதும், போரில் முன்னின்று போர் உடற்றும் துரசிப் படையினை நிரம்பவுடையவர் என்பதும், பலமொழி பேசும் நாடுகளையும் அழிக்கும் ஆற்றல் உடையவர் என்பதும், உன்னமரம் கரிந்து காட்டித் தோல்வியினை முன்கூட்டி உரைத்தாலும் அதற்கு அஞ்சாது படையெடுத்துச் சென்று போரில் வெற்றி பெறுபவர் என்பதும், வன்மையில் மிக்கவர்