பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 என்பதும், அவரோடு போரிட்டவர் பிழைத்தல் அரிது -ன்பதும், வெற்றித் திரு விளங்க வாய்க்கப் பெற்ற வன்மை யோர் என்பதும் விளங்குகின்றன. படைவீரர் தறுகண்மை யானையின் துதிக்கையினை அஞ்சாமை மேற்கொண்டு துண்டிக்கின்றனர். தடக்கை யானைத் தொடிக்கோடு துமிக்கும் எஃகுடை வலத்தர்கின் படைவழி வாழ்நர். -ஆறர்ம் பத்து 1: 29-30 மண்ணால் புனையப்பட்ட மதிலை வெற்றி பெற்றுக் கடந்தல்லது நாளை உணவு உண்ணமாட்டோம் என்று வஞ்சினம் கூறுகின்றனர். இன்றினிது நுகர்ந்தன மாயி னாளை மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்லது உண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர்... -ஆறாம் பத்து 8: 5.8 ஊன் வெட்டிய மரத்துண்டு போன்ற உடம்பில் போர்ப்புண் பெற்ற வடுநிறைந்த யாக்கையராய் உள்ளனர். எ.கா டூனங் கடுப்பமெய் சிதைந்து சார்ந்ததெழில் மறைத்த சான்றோர். -ஏழாம் பத்து; 7: 17.18 மேலும் வீரரைச் சான்றோர் எனக் கூறும் சொல் வழக்கும் நாம் பதிற்றுப்பத்தில் காண்கிறோம். எத்தனை நாள்கள் கழியினும் உழிஞை சூடி மதிலை முற்றுகையிட்ட சேரர் படை வீரர் மதிலைக் கைப்பற்றி யல்லது உணவு உண்ணுதலில்லை என நெஞ்சுறுதி கொண்ட மறவராயுள்ளனர். வெவ்வரி நிலைஇய வெயிலெறிங் தல்லது உண்ணாது அடுக்கிய பொழுதுபல கழிய நெஞ்சுபுகல் ஊக்கத்தர். - if -ஏழாம் பத்து : 8: 5.7