பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. களிறுகள் பாசறையெல்லையிற் பரந்து இயங்க, விரைந்து செல்லும் குதிரைகள் வீரர்களைச் சுமந்து அவர் குறிப்புவழிச் செல்ல, விளங்குகின்ற கொடிகள் அசையத் தேர்கள் நாற்றிசையும் சுழன்று திரிய, பகைவேந்தர் தம் நகர்ப்புறத்தே முற்றுகையிட்டுத் தங்கினும் சிறிதும் நடுக்க மில்லாதவராய், தமக்குரிய இடங்கட்குக் காவல் கொள்ளாத வலிமையினையுடையராகிய வீரர், பெரிய இருள் பரவிய இராக் காலத்தும், தம் தோளிலணிந்த வீரவளை ஒளி திகழ, தோளிடத்தே பிணிக்கப்பட்ட மீகை யினையுடையராய்ப் போரிற் புண்பட்டு வீழ்தலை விரும்பும் வேட்கையராய்ப் போர் விருப்பம் மிகுந்து வஞ்சின மொழிகள் கூறி, தாம் கூறிய வஞ்சினம் தப்பாமல் வாய்க்கத் தாம் பிறந்த குடிக்குக் கெடாத நல்ல புகழை நிலைநிறுத்துதற்குப் பாடுபட்டுழைக்கின்றனர். இவ்வாறு சேரர் மறவர் பெருமையும் வீரமும் செயலும் பெருங் குன்றுார் கிழாரால் விளங்கக் கூறப்படுகின்றன. களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க o ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப - அரசுபுறத் திறுப்பினு மதிர்விலர் திரிந்து வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வரத் தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும் முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக் கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார் இடாஅ ஏணி வியலறைக் கொட்ப, -ஒன்பதாம் பத்து; 1:6-14. போரில் மார்பிற்பட்ட புண்களைத் தைக்குங் காலத்து அப்புண்ணின் குருதியிலே மூழ்கி மறைந்தெழுகின்ற நெடிய வெண்மையான ஊசியினாலாகிய நீண்ட தழும்பும் பரந்த வடுவும் பொருந்திய மார்பினையும், அம்புகளால் புண்பட்ட உடம்பினையுடையராய்ப் பொர வந்தாரோடு தும்பை