பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 சூடிப் பொருவதல்லது, அன்னர் அல்லாத பிறருடன் தும்பை சூடாமல் புறக்கணித்துப் போய்ப் போருடற்றும் போர் மாட்சியுமுடையராகிய சான்றோர் என்று சேரர் மறவர் சிறக்கக் கூறப்பட்டுள்ளனர். ■-轟 瞬 ■ ■ 鄙 நெடுவெள் ரூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்புசே ருடம்பினர் நேர்ந்தோ ரல்லது # , தும்பை சூடாது மலைந்த மாட்சி. -ஐந்தாம் பத்து; 2:3.6. இதனால் சேர மறவர் விழுப்புண் பட்டாரோடன்றிப் பிறரொடு போரிடுவதற்கு விரும்பாதவர் என்பதும், பிறர் எதிர்த்தவழி வீறின்றெனத் தும்பை சூடாது, அவரைப் புறக்கணித்தொதுக்கி ஒத்தாரோடு பொருத சிறப்பினர் என்பதும் விளங்குகின்றன. எ.கம் படைவீரர் எஃகம் எனப்படும் வேலினைப் போரிற் பயன்படுத்தினர். இவ் எஃகம் சிவந்த வாயுடையதாகவும், புலால் நிணம் தின்று நாற்றத்தையுடையதாகவும், புலித் தோலால் இயன்ற உறையினுள் இருப்பதாகவும் வயிரம் பாய்ந்த பிடியுடையதாகவும், குதிரை வீரர் கையிற் கொண்டு பகைவர்மீது ஒச்சுவதோர் படைக்கருவியாகவும் விளங்கியதென்பது தெரியவருகின்றன. 1. செவ்வாய் எ.கம் விலங்குநர் அறுப்ப. – 2; 1:7 2. புலியுறை கழித்த புலவுவாய் எஃகம். – 3: 4:2 3. ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு காழெ. கம்பிடித் தெறிந்து. — 9; 10:36-37. குடை அரசரின் வெண்கொற்றக்குடை விண்தோய்ந்த உயர முடைத்து எனப் பேசப்பட்டுள்ளது.