பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விசும்புதோய் வெண்குடை — 2; 7:13 கொடி மன்னர் தம் கொடி மாண்புறப் பறப்பதாகக் கூறப்படு கின்றது. பாசறை மீது மன்னர் கொடி பறப்பதாகக் குறிப்பு வந்துள்ளது. உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை – 9; 8:17 முரசம் சேரரின் முரசம் பலவிடங்களிற் பேசப்பட்டுள்ளது. பகைவரை வென்று கடம்ப மரத்தால் முரசு செய்யப்பட்டது என்பதும், பகைவர் துயிலின்றி நடுங்க அம்முரசம் காரண மாக உள்ளது என்பதும், முரசினைப் படைவீரர் செந்தினை யுடன் குருதியினை அளைந்து பலி தூவுகின்றனர் என்பதும், முரசுடைய வேந்தரையும் சேர மன்னன் வெற்றி கொள் கிறான் என்பதும், இடியெனச் சேர வேந்தரின் வீர முரசு முழங்குகின்றது என்பதும் நாம் முரசு பற்றிப் பதிற்றுப் பத்தால் அறியவரும் செய்திகளாகும். 1. பலர்மொசிங் தோம்பிய திரள்பூங் கடம்பின் - கடியுடை முழுமுதல் துமிய வேஎய் வென்றெறி முழங்குபணை செய்த — 2; 1:12-14 2. முரசுமுழங்கு நெடுநகர் அரசுதுயில் ஈயாது – 2; 2:7 3. கடம்பறுத் தியற்றிய வலன்படு வியன்பனை 2: 7:5 4. உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசங் கண்பெயர்த்து – 2; 9:6-7 5. முரசுடைப் பெருஞ்சமங் தகைய வார்ப்பெழ – 4; 4:10 6. ......... செருமிக்கு உருமென முழங்கு முரசு – 9; 10: 55-56