பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 போர் பற்றிப் பதிற்றுப்பத்தால் அறியலாகும் செய்திகள் பதிற்றுப்பத்தில் ஆனிரை கவரும் வெட்சிப்போர் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கவில்லை. வட்கார் மேற் செல்லும் வஞ்சி பற்றிய செய்திகள் விரிவாக இடம் பெற்றுள்ளன. ஒரு நாட்டின்மீது படை நடத்திச் செல்லும் வேந்தனுடைய படை மறவர்கள் முதலில் தங்கள் முரசத் திற்குச் செந்தினையையும் குருதியையும் பலியாகத் தூவி வழிபடுவர்; குருதியால் அந்த மயிர்க்கண்ணைத் துடைப்பர். பின்னர்க் குறுந்தடி கொண்டு முழக்கி ஒசையெழுப்புவர். உடனே வீரர்க்கு மனவெழுச்சி மிகும்; அவர்களிடையே போர் ஆரவாரம் உண்டாகும். உருவச் செங் தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசங் கண்பெயர்த் தியவர் கடிப்புடை வலத்தர் தொடித்தோளோச்ச. -இரண்டாம் பத்து; 9:6-8. பகைவர்தம் காவல் மரத்தினை அறுத்து அவ்வடிமரம் கொண்டு முரசு செய்தல் சேரவேந்தர் இயல்பாகும். மாக்கடல் நடுவே குறும்பு செய்த கடற் பகைவர்தம் காவல் மரமான கடம்பினை வெட்டி வீழ்த்தி அதனால் செய்யப் பட்ட வெற்றி முரசுக்குப் போர்வீரர் திரும்பப் போந்து அரிய பலியினையிட்டுப் பரவக் குறுந்தடி கொண்டு அம் முரசின்கண்ணில் அறைந்து தொடியணிந்த தோளுடைய வீரர்கள் இயக்குகின்றார்கள். போரில் வெற்றி நல்கிய முரசத்தைப் பண்டையோர் வணங்கினர் என்பது இதனால் விளக்கமுறுகின்றது. துளங்குபிசி ருடைய மாக்கட னீக்கிக் கடம்பறுத் தியற்றிய வலன்படு வியன்பணை சூடுநர் பெயர்த்துவந் தரும்பலி தூஉய்க் கடிப்புக் கண்ணு று உந் தொடித்தோ ளியவர். -இரண்டாம் பத்து; 7: 4.7.