பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 யானை மறவர் யானை எருத்தத்தின் (கழுத்து) மீது அமர்ந்து படைக்கருவிகள் தாங்கிச் செல்வர். மன்னன், நெற்றிப்பட்டத்தையும் (ஓடை) பொன்னரி மாலையையும் அணிந்து பொலிந்து தோன்றும் யானையின் மீது இவர்ந்து செல்வான். ஓடை விளங்கு முருகெழு புகர்நுதற் பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும் அரைசுபடக் கடக்கு மாற்றல். -நான்காம் பத்து; 4: 6.11. குதிரை வீரர்கள் வேகமாக ஒடும் சிவந்த பிடரி மயிரினையுடைய குதிரைகள் மீதமர்ந்து படைக்கலன் ஏந்திப் போர்முகம் செல்வர். செவ்வுளைய மாவூர்ந்து —4; 4:4. ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு காழெ. கம்பிடித் தெறிந்து. —9; 10:36-37 தேர்ப்படை மறவர் நீண்ட கொடியினையுடைய தேர்கள்மீது ஏறிச் செல்வர். நெடுங்கொடிய தேர்மிசையும். –4; 4:5. காலாட்படையினர் வாள், வேல், வில் முதலிய படைக் கருவிகளை ஏந்திப் போர்க்களம் சேர்கின்றனர். அரசனிடம் பல்வகைப் படைகளும் பாங்குறப் பொலிந்து வி ள ங் கு ம். அவற்றுள் முதலாவதாகச் சொல்லப்படும் படை கூளிப்படை (Poineers; sappers and miners) எனப்படும். அது பகைப்புலம் சென்று அங்குள்ள பொருள்களைச் சூறையாடும்; தன்னைப் பின்பற்றி வரும் படைகளுக்கு ஒழுங்கான வழியமைத்துச் செல்லும். இக்கூளிப்படையின் பின்னரே, புலித்தோலால் செய்த உறையில் வாளைச் செருகியுள்ள வாட்படை