பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 வீரரும் வேற்படை வீரரும் பிற படை மறவரும் அணி வகுத்துப் போர்க்களம் செல்வர். கொள்ளை வல்சிக் கவர்காற் கூளியர் கல்லுடை நெடுநெறி போழ்ந்துசுர னறுப்ப ஒண்பொறிக் கழற்கால் மாறா வயவர் திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப. -இரண்டாம் பத்து; 9:1-4. இக்கூளிப்படையினை அடுத்துச் செல்லும் படை தார் அல்லது தூசிப்படை என்று கூறப்படும். இத் தூசிப்படை மறவர், மனவெழுச்சியும் தறுகண்மையும் மிக்கவர். பகைவரோடு போர்க்களத்தில் அஞ்சாது போருடற்றுவர். பகைப்புலத்திற்கு எரியூட்டுவர்; பகைவர் நாட்டு மக்கள் மனத்தில் அச்சத்தைத் தோற்றுவித்து அவர்களுக்கு மாறாத மனக்குழப்பத்தை விளைவிப்பர். மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த போரெதிர் வேந்தர் தாரழிந் தொராலின். -மூன்றாம் பத்து; 3: 16.17. மாற்றுப்படைகள் இரண்டும் சமவெளியில் போரிடும். தும்பைப்பூ மாலையைச் சூடிப் போர் செய்வர். மன்னர் பொன்னால் இயன்ற தும்பைப் பூமாலையைச் சூடுதல் மரபு. புற்றின் கண் அடங்கிய பாம்புபோல் ஒடுங்கி யிருக்கும் அம்புகளையும், வளைதலையுடைய வில்லையும், களிறுகளைக் கொல்வதால் நுனி மடிந்த வேலையுமுடைய வீரர்கள் மனவெழுச்சி மிக்கவர்கள். பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப் புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின் நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற் களிறெறிந்து முரிந்த கதுவா யெஃகின் விழுமியோர் துவன்றிய வன்கண் நாட்பின். -ஐந்தாம் பத்து; 5: 1.5.