பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மதிலை வளைத்துச் செய்யும் போர் உழிஞை' என்று கூறப்படும். மதிலைக் கைப்பற்ற மன்னன் பொன் னால் செய்த உழிஞைப்பூ மாலையைச் சூடுவான். மன்னனின் மாவீரர்கள் உழிஞைப் பூக்களால் ஆகிய அழகிய மாலையைச் சூடுவர். சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடி. –7; 3: 8. அகமதிலைப் பற்றச் செல்வோர் அதன் எதிரேயுள்ள செண்டு வெளியில் (Plain) காத்துான்றும் பகைவீரரை வெல்ல வேண்டும். கணைய மரம் செறிக்கப்பட்ட உயரிய நிலையினையுடைய மதில்வாயிலிடத்தே துரங்கு மாறு கட்டிய வில்லினது அம்பு செலுத்தும் வன்மையோடு பொருந்திய விழுமிய சிறப்புடைய ஐயவித்துலாமும், காவற்காடும், ஆழ்ந்த அகழியும், நெடிய மதிலிடத்தே நிரல்பட வமைத்த பதனமும் உடைய அகப்பா என்னும் அரணைச் சேரன் வென்ற செய்தி ஒரு பாடலில் சிறக்க உரைக்கப்பட்டுள்ளது. துஞ்சுமரங் துவன்றிய மலரகன் பறந்தலை ஓங்குநிலை வாயில் தூங்குபு தகைத்த வில்விசை மாட்டிய விழுச்சீ ரையவிக் கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிரைப் பதனத் தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த பொன்புனை யுழிஞை வெல்போர்க் குட்டுவ. -மூன்றாம் பத்து; 2: 21.27. திருவள்ளுவர் பொருட்பாலில் அரசியலைப் பற்றிக் கூறவந்தவிடத்து இறைமாட்சி அதிகாரத்தின் முதற் குறளில், படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு அரண் ஆறும் உடையவனே அரசருள் ஏறு என்று குறிப் பிட்டுள்ளார்.