பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 படைகுடி கூழமைச்சு நட்பு:அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. -திருக் : 381. (He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings —Rev. Drew & John Lazarus), அரண் என்றே ஒர் அதிகாரத்தைத் திருவள்ளுவர் வைத்திருப்பதிலிருந்து அரணின் அவசியத்தினை அறிய லாம். அரண் எனப்படுவது மணிபோல் தெளிந்த நீருடைய அகழியும், வெளிநிலமும், மலையும், அழகிய நிழலுடைய காடும் உடையது என்றும் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். மணிருேம் மண்ணும் மலையும் அணிநிழல் காடும் உடைய தரண். -திருக்: 742, (A fort is that which has everlasting water, plains, moun tains and cool shady forests—Rew. Drew and John Lazarus). - பதிற்றுப்பத்தில் புலவர்கள் வருணித்துள்ள கோட்டை இத்தகு சிறப்புகளைக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. கோட்டைக் க த வு மிகவும் வலிமையுடையதா யிருக்கும்; இருப்பாணிகளால் இறுகப் பிணிக்கப்பட்டுக் கதவின் பின்புறம் வலிமை வாய்ந்த கணைய மரம் குறுக்குச் சட்டமாக வைக்கப்பட்டிருக்கும். இக்கதவு களைப் பிளக்க யானைகளை வீரர் ஏவுவர். யானைகள் தம் கொம்புகளால்-தந்தங்களால் அவ்வலிய கதவினைப் பிளக்க முயலும். அம்முயற்சியில் சிற்சில சமயம் அவற்றின் கொம்புகள் முறிவதும் உண்டு. மேலும் கோட்டை வாயிலில் பகைவரை மகளிராக்கி அவர் அணிந்து கொள் வதற்குச் சிலம்பும் தழையும் பந்தும் கட்டித் தொங்க விடும் மரபும் உண்டு என்பதனை யறியலாம். -