பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110. செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயிற் கோள்வல் முதலைய குண்டுகண் ணகழி வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை. -ஆறாம் பத்து; 3 : 6.9. திருமுருகாற்றுப்படையில் நக்கீரரும் பகைவரைப் பெண்களாகப் பாவித்துக் கோட்டைவாயிலில் அவர் அணிந்து கோடற்குச் சிலம்பும் தழையும் பந்தும் கட்டித் தொங்கவிடும் வழக்குண்மையை, செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பங்தொடு பாவை தூங்க. -திருமுருகு; 68.69. மேலும் கோட்டை வாயிலில் அம்புகளை எய்யும் எந்திரப் பொறிகள் அமைந்திருக்கும். இவ் எந்திரப் பொறிகள் சிலப்பதிகாரத்தில் விளங்க உரைக்கப் பட்டுள்ளன. இவ் எந்திரப் பொறிகள் யவன நாட்டிலே யிருந்து இங்குக் கொண்டுவரப்பட்டுத் தமிழ்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்பெற்றன என்பர் அறிஞர். எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் –7; 3 : 7. ஆரெயில் அலைத்த கல்கால் கவணை –9; 8 : 18. என்ற தொடர்கள் இதனை யுணர்த்தும். கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழிகளில் கொடிய முதலைகள் விடப்பட்டிருக்கும் செய்தி, கோள்வல் முதலைய குண்டுகண் அகழி –6; 3 : 8. என்ற தொடரால் பெறலாகின்றது. கோட்டைகள் வளைவு வளைவாகக் கட்டப்படும் என்பதும், அவை வானளாவி உயர்ந்திருக்கும் என்பதும் அறியப்படுகின்றன.