பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 வானுற வோங்கிய வளைந்துசெய் புரிசை. –6; 3 : 9. மதிலைக் கைப்பற்ற உழிஞை சூடிச் செல்லும் வீரர் கோட்டைக்கு வெளியே அமைந்துள்ள காவற்காட்டினை முதற்கண் அழிப்பர். பின்பு முதலைகள் உறையும் கொடிய ஆழமான அகழியைக் கடப்பர். மதிலைக் காக்கும் வீரர் மதிலைக் கைப்பற்றும் வீரரோடு கைகலந்து பொருதுவர். உழிஞை சூடிய வீரர் அவரை வென்று மதில்மேல் ஏறுவர். அடுத்த வேளை உணவு கோட்டையைக் கைப்பற்றி உள் நுழைந்த பின்னரே என வஞ்சினம் கூறி மனஞ்செருக்கிப் போராற்றுவர். வெவ்வரி நிலைஇயே வெயிலெறிந் தல்லது உண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய நெஞ்சுபுக லூக்கத்தர் - ஏழாம் பத்து; 8 : 6.7. இன்றினிது நுகர்ந்தன மாயின் நாளை மண்புனை யிஞ்சி மதில்கடங் தல்லது உண்குவ மல்லேம் புகாவெனக் கூறி -ஆறாம் பத்து; 8 : 5-7 சேரநாட்டு வீரர் வெள்ளிய பனந்தோட்டிலே நல்ல நிறமான பூக்களை விரவி நிறம் விளங்கத் தொடுத்தணி கின்றனர் என்றும், அவர் வாளினது வாயால் வடுப்பட்ட உடம்பினர் என்றும், இடிபோல் பகைவரைத் தாக்கப் படைக்கலன்களைக் கையிலேந்தி வருபவர் என்றும் காக்கை பாடினியார் பாராட்டுவர். வெண்டோட் டசைத்த ஒண்பூங் குவளையர் வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர். -ஆறாம் பத்து 8: 2.4. இத்தகைய ஆற்றல் சான்ற வீரமறவர்கள் மதிலின்கண் போர் செய்வர். மதிற்போரில் வெற்றி பெற்றவுடன் ஆரவாரத்துடன் உழிஞைப்பூ மலைந்த வீரர் அகநகர்க்குள் நுழைவர். அங்குத் தம்மோடு மாறுபாடு கொண்டு