பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மலைந்த வீரரை வென்று அழகிய நகருக்கு அழல் (எரி) ஊட்டுவர்; நகரைக் கொள்ளையிடுவர். கடிமிளைக் குண்டு கிடங்கின் மெடிமதில் நிலைஞாயில் அம்புடை யாரெயில் உள்ளழித் துண்ட அடாஅ வடுபுகை யட்டுமலர் மார்பன். -இரண்டாம் பத்து; 10: 18-21. கோட்டையைத் த ம க் கு ரி ய தா. க க் கைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்ற முற்றுகையில் நால்வகைப் படை களும் கோட்டையைச் சூழ்ந்துகொள்ளும் என்றும், கோட்டையின் உள்ளேயிருப்பவர் வெளியில் வர இயலாத படி அம்முற்றுகை அமைந்திருக்கும் என்றும், கிடுகு (கேடயம்) ஏந்திய படை மறவரும் வேற்படை வீரரும் வாட்படை வயவரும் குதிரைப் படையினரும் யானைப் படையினரும் மதிலின் பக்கத்தே மிக நெருங்கிச் சென்று தமது முற்றுகையைப் பலப்படுத்திப் பயனுள்ளதாக்குவர் என்றும் கபிலர் ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார். இழையணிந்து எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு மழையென மருளும் மாயிரும் ப.றோல் எ.குபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ வந்துபுறத் திறுக்கும். -ஏழாம் பத்து; 2: 1-5. கோட்டை மதில்களில் எந்திரப் பொறிகள் அமைந்து அச்சம் தருவன எனக் கண்டோம். ஆனால் கண்டார் விரும்பத்தகும் ஒவியங்களும் கோட்டை மதில்களையடுத்து நீண்ட பெருமனையிடத்தே நெடிய சுவர்களில் வரையப் பட்டிருக்கும் எனக் குறிப்பு வந்துள்ளது. நெடுமண் இஞ்சி நீணகர் வரைப்பின் ஓவுறழ் நெடுஞ்சுவர். -ஏழாம் பத்து; 8:16.17.