பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 கோட்டைக்கு வெளியேயுள்ள பகைவர் ஊர்கள் தீப் பற்றி எரியும். கோட்டையின் உள்ளிருப்பவர்கள் உண் பதற்கு உணவுப்பொருள்கள் செல்லாமல் தடுத்து நிறுத்தப் படும். ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த் தோன்ற லீயாது தம்பழி யூக்குநர் குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில் ஆரெயிற்றோட்டி வெளவினை. -எட்டாம் பத்து; 1:9-13 கோட்டை முற்றுகையுள் சிக்கிய மன்னன் மான முடையனாயின் போரிட்டு மடிவான்; இன்றேல் மதிலை வளைத்த மன்னனுக்குத் திறைதந்து பணிந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வான். வணங்க லறியா ருடன்றெழுந்து -ஒன்பதாம் பத்து 4:14. புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சி அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிய பணிந்துதிறை தருபகின் பகைவர். -ஏழாம் பத்து 2:10-12. பெரிய தப்புரு ராயினும் பகைவர் பணிந்துதிறை பகரக் கொள்ளுகை -இரண்டாம் பத்து; 7: 2.3. அறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப் பணிந்துதிறை தருபகின் பகைவர் -ஆறாம் பத்து; 9: 11-13. பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறை கொண்டு பெயர்தி. -- -எட்டாம் பத்து; 1 : 33-24. சில சமயங்களில் களிறுகளைத் திறையாகப் பெற்று மன்னன் சினந் தணிவான்: சே. செ. இ.8