பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தொன்றுதிறை தந்த களிற்றொடு -ஏழாம் பத்து; 6 : 7. சில சமயங்களில் பகை வேந்தர் களிறோடு பொற்கலங் களும் தந்து சேரவேந்தனின் சினத்தைத் தணிவித்து அவன் ஏவல் கேட்கின்றனர். ஒளிறுவாள் வயவேந்தர் களிறொடு கலந்தந்து தொன்றுமொழிந்து தொழில்கேட்ப. -ஒன்பதாம் பத்து; 10: 6.8. பாசறை இனிப் பாசறைச் செய்திகளாகப் பதிற்றுப்பத்து கொண்டு அறிவனவற்றைக் காண்போம். போர்மேற் சென்ற மன்னன் படையுடன் தங்கியிருக்கும் காட்டின் நடுவேயுள்ள இடம் பாசறை' எனப்படும். பாசறைக்கு நடுவில் மன்னனின் இருக்கை அமைந்திருக்கும். பாசறையில் வீரர்கள் எப்போதும் காவல் இருந்த வண்ணம் இருப்பர். யானைப்படைகள் ஒரு பக்கமும், குதிரைப்படைகள் ஒரு மருங்கும், தேர்ப்படைகள் பிறி தோர் பக்கமும், காலாட் படையினர் ஒரு பக்கமும் பாடிவீட்டில் (பாசறையில்) தங்கியிருப்பர். மன்னனின் மாண்புசார்ந்த வெற்றியை வாழ்த்திப் பாடிப் பரிசில் பெற வேண்டுமென்று பாணரும் புலவரும் கூத்தரும் பொருநரும் பாசறைக்கண் தங்கியிருப்பர். விறலியரும் பாணரும் மன்னன் மாற்றாரிடைக் காட்டிய மாசிலாத வீரத்தினைப் புகழ்ந்து பாடி நல்ல அணிகலன்களைப் பரிசிலாய்ப் பெறுவர். போர்க்களத்தில் வெற்றி பெற்று வாகை சூடிய வேந்தனைச் சிறக்கப் பாடி மகிழ்விப்பர். மின்னிழை விறலியர் நின்மறம் பாட இரவலர் புன்கண் தீர நாடொறும் உரைசால் நன்கலம் வரைவில வீசி. * - -ஆறாம் பத்து; 4: 6.8.