பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 செங்கள விருப்பொடு கூல் முற்றிய உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசங் கண்பெயர்த்து. -இரண்டாம் பத்து ; 9:5.1. போர்க்களத்தே ஊது கொம்புகளும் வலம்புரிச் சங்கங்களும் முழங்கி வீரர்க்கு ஊக்கத்தினை நல்கும்: கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க வயங்குகதிர் வயிரமொடு வலம்புரி யார்ப்பப் பல்களிற் றினநிரை புலம்பெயர்ந் தியல்வா அமர்க்கண் அமைந்த அவிர்கிணப் பரப்பு. -ஏழாம் பத்து 7:5-8, மேலும் முரசின் ஒசையும் தண்ணுமை முழங்கும் ஒலியும் போர்க்களத்தே கேட்கும். எடுத்தே றேய கடிப்புடை யதிரும் போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்கு. -ஒன்பதாம் பத்து: 4:1-2. போர்ப்புறு தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல. -ஒன்பதாம் பத்து ; 4:15, பாசறையில் பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்குவதோடு கலந்து, முரசும் முழங்கும். விரவுப்பனை முழங்கு நிரை தோல் வரைப்பின் உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை. -ஒன்பதாம் பத்து ; 8:16.17. மன்னர்கள் அந்நாளில் மண்ணாசை காரணமாகப் போர் செய்யவில்லை. தன்னுடைய அரசநிலை(Sovereignty) மதிப்புக் காரணமாகவே போரிட்டனர். நிலையாமை உணர்வினை அவர்கள் போரிடுங் காலத்தும் மறப்பதில்லை. நோய்த்தொழில் மலிந்த வேலிண் டழுவத்து காஞ்சி சான்ற செருப்பல செய்து. -ஒன்பதாம் பத்து : 4:16.19,