பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 படையெடுக்கும் அரசர் தாம் மேற்கொள்ளும் போரில் வெற்றி கிடைக்குமா என்பதைக் கழங்கிட்டுப் பார்த்தல் மரபாகும். எல்லா மெண்ணி னிடுகழங்கு தபுரு. 4:2:8 மேலும் உன்னமரம் போர்க்குச் செல்லும் வீரர்க்கு வெற்றி கிடைப்பதாயின் தழைத்தும், தோல்வி வருவ தாயின் கரிந்தும் காட்டும் என்பர். செல்வக்கடுங்கோ வாழியாதன் உன்னத்துப் பகைவன் (7; 1:16) என்று கபிலரால் பாராட்டப்படுகிறான். வ்ேந்தன் போரில் வெற்றி பெற்ற பிறகு தன் வெற்றிக்குக் காரணமாக இருந்த வீரர்க்கு நல்லுணவினை விருந்தாக நல்கி, இசை விருந்தும் அவர் இனிமையாக நுகர்தற் பொருட்டு ஏற்பாடு செய்வான். ஓடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமங் ததைந்த செருப்புகன் மறவர் உருமுகில னதிர்க்குங் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும். -மூன்றாம் பத்து 10:40.43. போரில் தோற்ற படைவீரருட் சிலர் வெற்றி பெற்ற வேந்தன் படையில் சேருவதும் உண்டு என்பது, ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி கேண் டனையே மென்றனர். -ஏழாம் பத்து : 3: 13, 14. போருக்குச் செல்லும்போது சேரவேந்தர் அயிரை மலைக் கொற்றவைத் தெய்வத்தினைப் பரவினர். அது போது சேரநாட்டு வீரர் தம் விழுப்புண்ணில் சொரியும் குருதி கலந்த சோற்றுத் திறளைப் படைத்து வெற்றி தரும் அணங்காம் அயிரைமலைக் கொற்றவையை வணங்கி வழிபட்டனர்.