பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோடு உருகெழு மரபின் அயிரை பரைஇ. -ஒன்பதாம் பத்து 8: 11- 12 போரிலே தோற்றோடாத வீரமும், தோற்றோடும் பகைவர்மீது படைக்கலன்களை ஒச்சாத ஆண்மையுங் கொண்டு, சேரநாட்டு வீரர் துலங்கினர். பிறர்க்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள். –8; 10–8. புறங்கொடை யெறியார்கின் மறப்படை கொள்ளுங்ர். —4; 8: 1: 33 இத்தகு ஆற்றல் சான்ற சேரர்படை மறவர் பகை வரின் கரும்பு விளையும் கழனிகள், விடத்தேரை மரங் களுடன், கரிய உடையென்னும் மரங்கள் நெடிது வளர்ந் தோங்க, கவைத்த தலைமயிரினையுடைய பேய் மகள் கழுதினை பூர்ந்து திரிய, பரந்த நெருஞ்சி முள் மிகுந்த நீறுபட்ட போர்க்களத்தின் புழுதி படிந்து பொலிவிழந்து மக்களும் விலங்குகளும் செய்யும் ஆரவாரம் இல்லையாக யொழிந்தன. பாடல் சான்ற பயங்கெழு வைப்பின் நாடுகவின் அழிய நாமங் தோற்றிக் கூற்றடு கின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் கவைத்தலைப் பேய்மகள் கழுதுார்ங் தியங்கத் தாதெரு மறுத்த கலியழி மன்றத் துள்ள மழிய ஆக்குநர் மிடறபுத் துள்ளுநர் பனிக்கும் பாழாயினவே. -இரண்டாம் பத்து : 3: 9. 19. பகைவர் நாடு இவ்வண்ணம் பாழாகச் சேரர் ஓம்பிய செல்வவளம் மிக்க நாடோவெனில் மாற்றார் படையெடுப்