பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

||9 பரே என்னும் அச்சம் சிறிதும் இன்றி அமைதியில் திளைத்து மகிழ்கிறது. நல்ல சேற்றில் எருதுகள் இழுக்கும் வண்டிச் சக்கரம் புதையுண்டு போக, அச் சேற்றினின்றும் சக்கரத்தைத் துரக்க முயலும் வண்டியோட்டிகள் எழுப்பும் ஆரவாரம் தவிர வேறு பூசல்கள் ஏதும் அறியாத நன்னாடாக-புதுவருவாய் உடைத்தான காமர் கவினில் துலங்கும் நாடாக - செந்தமிழ் புரந்த சேரமன்னர் காத்தோம்பிய நாடு துலங்கிற்று. அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப கல்லெருது முயலு மளறுபோகு விழுமத்துச் சாகாட் டாளர் கம்பலை யல்லது பூச லறியா நன்னாட் டியாண ரறாஅக் காமரு கவினே, -மூன்றாம் பத்து; 7:12-16. மிளகை உரலில் இட்டு உலக்கையால் இடிப்பது போன்று பகைவர் தலைகளை உரலில் இட்டு இடிக்கும் செய்தி பரணரால் கூறப்பட்டுள்ளது.

    • 一輯 量 量 圖-■■ 量 ■■ 圖 ■■■ ■■■■■ 劃 தெவ்வர்

மிளகெறி யுலக்கையி னிருந்தலை யிடித்து. -ஐந்தாம் பத்து; 1:20-21. இச் செய்தி வெளியிடும் செயல் கொடுமை நிறைந்த தாக உளது. இதுகாறும் கூறியவற்றால் சேரர்தம் சிறந்த வீரப் பண்பும், நாற்படை பற்றிய செய்திகளும், அக்காலப் போர் முறையும், பாசறைச் செய்தியும் இன்ன பிற புறத்துறைச் செய்திகளும் விளக்கமாக அறியப்பட்டன. கொடை மடத்தில் சேர வேந்தர்கள் சிறந்திருந்தமை போன்றே படைமடத்திலும் பல்லாற்றானும் சிறப்புற்றிருந்தனர் என்பது பதிற்றுப்பத்துப் பாடல்களால் தெள்ளிதிற் புலனா கின்றது.