பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஆட்சி அலுவல்கள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ஐம்பெருங்குழு, எண்பேராயம் பற்றிய குறிப்போ, செய்தி களோ பதிற்றுப்பத்தில் இல்லை. அமைச்சர் தானைத் தலைவர் பற்றிய சிறு குறிப்பு மட்டும் பதிற்றுப்பத்துப் பாடல்களில் இடம் பெற்றிருக்கக் காணலாம். வேள்வி போற்றல் சேரவேந்தர் வேள்விகளைப் போற்றி வேட்டனர். அரிய மறைப் பொருளை அறிஞர் உரைப்பச் செவ்விதின் கேட்டனர். அவர் உரைத்த விரதங்களை விடாது கடைப் பிடித்தனர். அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன்மக்கள் மனம் மகிழும்படி வேள்விகளை ஆற்றி முடித்தனர். கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப. -எட்டாம் பத்து; 4:1-2, பெருஞ்சேரல் இரும்பொறை தன் புரோகிதனைத் துறவு மேற்கொள்ளும்படி செய்தான். கொடை, மன அமைதி, செல்வம், மகப்பேறு, தெய்வ உணர்வு முதலியன தவமுடையார்க்கு உண்டாகும் என்பதனை அறிவுறுத்தி அப்புரோகிதனை மன்னன் தவம் செய்யுமாறு வேண்டிக் காட்டிற்கு அனுப்பினான். த துது " ............ நின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை வண்மையு மாண்பும் வளனு மெச்சமும் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலை பெயரக் கூறினை பெருமகின் படிமை யானே. -எட்டாம் பத்து; 4: 23.28. பல்யானைச் செல்கெழு குட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கெளதமனார் என்னும் அந்தணப் புலவரும் அவர்