பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12| மனைவியும் சுவர்க்கம் பெறும் பொருட்டுப் பெரும் பொருள் செலவிட்டுப் பத்துப் பெருவேள்விகளைத் தக்காரைக் கொண்டு வேட்பித்தான் என்று அவனைப் பற்றிய பதிகம் கூறுகின்றது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வேதியர்க்குப் பசுக்களோடு குடநாட்டில் ஒர் ஊரும் வழங்கினான் என்று பதிக வழி அறிகின்றோம். இச்செய்திகளால் சேரநாட்டில் வேதநெறி தழைத்து ஓங்கிய உண்மையினை உணரலாம்.' சமயச் செய்திகள் முனிவர்கள் பிற உயிர்களுக்குத் தீங்கு நினையாதவர்; வாய்மை தவறா நெறியினர். பிறர் தம்மை மதித் தொழுகும் ஆற்றலினர். அவர்கள் அரசர்களை வேள்வி பியற்றப் பணித்தனர். அம்முனிவர் கடவுளர்' எனக் கூறப்பட்டனர். சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென்று ஐந்துடன் போற்றி யவை.துணையாக எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி உருகெழு மரபிற் கடவுள் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விரும்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி. -மூன்றாம் பத்து 1: 1-7 மேலும் உண்ணா நோன்பினை நோற்கும் விரதியர் கோவில் மணி அடித்ததும் விடியற் காலையில் குளிர்ந்த நீர்த்துறைக்குச் சென்று நீராடுவர். பின்னர்த் திருமாலின் திருவடிகளில் விழுந்து வணங்கி அப்பெருமானை வாழ்த்தி நிற்பர். தெள்ளுயர் வடிமணி யெறியுநர் கல்லென உண்ணாப் பைஞ்ஞீலம் பனித்துறை மண்ணி வண்டுது பொலிதார்த் திருளுெம ரகலத்துக் 11. டாக்டர் மா. இராசமாணிக்கனார், தமிழ் மொழி. இலக்கிய வரலாறு, பக். 233,